நமது குழந்தைகளுக்கு நாம் அதிகம் கொடுக்கும் தின்பண்டங்களில் ஒன்றுதான் பிஸ்கட். இது குழந்தைகள் மட்டுமில்லாமல் அனைவரும் சாப்பிட்டு வருகின்றனர். இந்த பிஸ்கட்டுகளை சாப்பிடுவதனால் ஏற்படும் தீமைகளை இந்த பதிவில் காண்போம்.
பிஸ்கட்டில் இருக்கும் சர்க்கரை, கொழுப்பு போன்ற அமிலங்கள் பிஸ்கட் தயாரிப்பின் போது எண்ணெய் மற்றும் டால்டாவை அதிகமாக சேர்ப்பதனால் உருவாகிறது. இவையெல்லாம் டிரான்ஸ்பரென்ட் அமிலங்கள் என்று கூறப்படும் நிலையில் எவ்வளவு சேர்த்துள்ளனர் என்பதை பிஸ்கட் பாக்கெட்டில் குறிப்பிட வேண்டும்.
ஆனால் அப்படி நிறைய நிறுவனங்கள் செய்வதில்லை. இந்த அமிலங்கள் இருப்பது தெரியாது என்பதால் மக்கள் இதை சாப்பிடும் போது அதிக கொழுப்பு சேர்ந்து இதய நோய் பிரச்சனை கூட வருகிறது. சர்க்கரை நோயும் இதனால் ஏற்படுகிறது என்று நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். குழந்தைகள் நான்கு முதல் ஐந்து பிஸ்கட் பாக்கெட்டுகளை சாப்பிட்டுவிட்டு தங்களது வயிறு நிறைந்து விட்டதாக கூறி வருகின்றனர்.
ஆனால் இந்த பிஸ்கட்டில் இருக்கும் ரசாயனங்கள் இதற்கு காரணமாக அமைகிறது. மேலும் இந்த பிஸ்கட் நமது உடலில் இருக்கும் நீர் சத்தை அதிகமாக உரிஞ்சும். இதன் காரணமாக மலச்சிக்கல் பிரச்சனையும் ஏற்படலாம். வாரத்திற்கு ஒன்று முதல் இரண்டு முறை பிஸ்கட் சாப்பிடுவது தவறில்லை. ஆனால் அதை தினமும் சாப்பிடக்கூடாது. விளம்பரங்களில் வரும் விஷயங்களை பார்த்து ஏமாந்து குழந்தைகளுக்கு பிஸ்கட் தருவதை நிறுத்தி விடுங்கள்.




