புரியாத புதிர் பெண்..!! ஆம் அவர்கள் புரியாத புதிர் தான்..!! அருமையான பதிவு..!! படித்ததில் பிடித்தது..!!

Oplus_16908288

புரியாத புதிர் பெண்..

 

அவர்களால் சில மீளவே முடியாத இன்னல்களிலிருந்து ஒரே நாளில் உறுத்தலின்றி வெளியேறி இன்னொரு உலகத்திற்கு சென்று வரவும் முடியும்..

அதிலியே புழுங்கி வெந்து தணிந்து வேறு இடத்தில் செல்லாமல் அங்கேயே செத்தொழியவும் முடியும்..

 

அவர்களால் தன்மானத் திமிரில் எவரையும் சாராமல் தன்னை மட்டுமே நம்பி சுயசிந்தனை உடைய பெண்ணாகவும் வாழ முடியும்..

எல்லாவற்றுக்கும் அடங்கி அத்தனைக்கும் தலையை ஆட்டும் அடங்கியப் பெண்ணாகவும் சிறப்பாக வாழ முடியும்..

 

அவர்களுக்கு கண்ணீர் சிந்தாமல் அழும் வித்தையும் தெரியும்.

ஊர் அறிய கத்திக் கதறி அழுது அனைத்துப் பார்வையும் தன் மீது விழ வைக்கும் சூட்சமும் தெரியும்…

 

எல்லா சோகத்தையும் மனதில் ஏற்றிக் கொள்ள முடியாமல் அனைவரின் ஆறுதலுக்காக ஏங்குபவளும் அவள் தான்..

 

துயரங்களை எல்லாம் வார்த்தையில் வடிக்க முடியாமல் துயருற்ற போதிலும் போராட்டக் குணத்தை இழக்காமல்

தனக்குத் தானே ஆற்றிக் கொள்பவளும் அவள் தான்…

 

இதுவும் கடந்து போகும் என உணர்த்தியவளும் அவள் தான்.

எதுவும் மறந்து போகாது என

அனத்தியவளும் அவள் தான்.

 

அடுத்தவரின் பிரச்சனைகளுக்கு

உடனடியாகத் தீர்வு சொல்பவளும் அவள் தான்..

 

தலைவலியைப் பிரளயம் போலவும் உயிரே போகும் வலியை மிகச் சாதாரணமாக எடுத்துக் கொள்ளவும் இந்தப் பெண்களால் மட்டுமே சாத்தியம்.

 

ஆம் அவர்கள் புரியாத புதிர் தான்…

Read Previous

இறைவன் கொடுத்த இந்த உடல் மீது உங்களுக்கு அக்கறை இருந்தால் மாற்றிக் கொள்ளுங்கள்..!! படித்ததில் பிடித்தது..!!

Read Next

கணவன் உண்டபின் அதே இலையிலோ அல்லது தட்டிலோ உணவு உண்ணச் சொல்லுவார்கள்அது ஏன் என்று தெரியுமா?.. படித்ததில் பிடித்தது..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular