ஐபிஎல் ஆரம்பித்து, சூடு பிடித்து வரும் நிலையில் நேற்று 3:30 மணியளவில் குஜராத் அணிக்கும் டெல்லி அணிக்கும் குஜராத்தில் போட்டி நடந்து முடிந்தது. இதில் டாஸ் வென்ற குஜராத், முதலில் பௌலிங் செய்வதாக முடிவெடுத்தது.
முதலில் பேட்டிங் ஆடிய டெல்லி அணி 203க்கு 8 விக்கெட்டுகளை விட்டு தனது பேட்டிங்கை முடித்தது. இதில், அக்சர் படேல் 37 ரங்கள் எடுத்து அசத்தினார். மற்ற வீரர்கள் தனது பங்களிப்பை வழங்கியதால் இந்த இலக்கை வைக்க முடிந்தது. பௌலிங்கில் குஜராத் அணியின் பிரசித் கிருஷ்ணா 4 விக்கெட்டுகளை எடுத்து அசத்தினார்.
அடுத்து பேட்டிங் ஆட இறங்கிய குஜராத் அணி இதிலும் சிறப்பாக தான் விளையாடியது. பட்லர் 97 ரன்கள் எடுத்தார். பௌலிங்கிலும் டெல்லி அணி சுமாராக தான் விளையாடியது. இறுதியில் குஜராத் 19.2 ஓவரில் இலக்கை அடைந்து வெற்றி பெற்றது.



