பூசணிக்காயை வைத்து இந்த உணவை செய்து பாருங்கள்..!! சுவையான மற்றும் சத்தான செய்முறை..!!

நம் அனைவருக்கும் தின்பண்டங்கள் என்றாலே மிகவும் பிடிக்கும். அதுவும் ஆரோக்கியமான தின்பண்டங்கள் என்றால் யார் தான் விரும்ப மாட்டார்கள். அப்படி இன்று பூசணிக்காய் கட்லெட் எப்படி செய்வது என்று தெளிவாக இந்த பதிவில் காண்போம்.

தேவையான பொருட்கள்:
துருவிய பூசணிக்காய் – 300 கிராம்
உருளைக்கிழங்கு – 1
சோளமாவு – 2 டீஸ்பூன்
அரிசி மாவு – 2 டீஸ்பூன்
மிளகு தூள் – 1 டீஸ்பூன்
கறி மசாலாத்தூள் – 1 டீஸ்பூன்
வெங்காயம் – 1
பச்சை மிளகாய் – 2
எலுமிச்சம்பழச்சாறு – 1 டீஸ்பூன்
பிரட்தூள் – தேவையான அளவு
எண்ணெய் – தேவையான அளவு
உப்பு – தேவையான அளவு

செய்முறை:

உருளைக்கிழங்கை வேகவைத்து எடுத்துக் கொள்ளவும். அதனைத் தோல் நீக்கி நன்றாக மசித்து கொள்ளவும். வெங்காயம் மற்றும் பச்சை மிளகாயை சிறிதாக வெட்டிக் கொள்ளவும். பூசணிக்காயை துருவி இட்லி பாத்திரத்தில் சில நேரம் வேக வைக்கவும்.

ஒரு பாத்திரத்தை எடுத்து அதில் அந்த துருவி வேகவைத்த பூசணிக்காய் மசித்த உருளைக்கிழங்கு வெங்காயம் பச்சை மிளகாய் கறி மசாலா தூள் மிளகுத்தூள் எலுமிச்சை பழச்சாறு அரிசி மாவு சோள மாவு உப்பு சேர்த்து பிசைந்து எடுத்துக் கொள்ளவும். அதனை கட்லெட் வடிவில் தட்டி வைத்துக் கொள்ளவும்.

பின்பு அதனை பிரட் துகளில் நனைத்து பத்து நிமிடங்கள் அப்படியே வைத்துக் கொள்ளவும். ஒரு கடாயை எடுத்து எண்ணெய் ஊற்றி சூடான பிறகு அதில் இந்த கட்லெட்டை போட்டு வேகவிட்டு எடுக்கவும். அவ்வளவுதான் சுவையான மற்றும் சத்தான பூசணிக்காய் கட்லெட் தயார்.

Read Previous

ஜனநாயகன் படத்தில் இருந்து ஒரு சிறப்பான அப்டேட்..!! டீசரை வெளியிட காத்திருக்கும் படக்குழு..!!

Read Next

இந்த சாக்லேட் புட்டிங்கை உங்கள் குழந்தைகளுக்கு கொடுத்து பாருங்கள்..!! குழந்தைகளுக்கு மிகவும் பிடித்த செய்முறை இதோ..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular