பெண்களுக்கான சில பூஜை அறை குறிப்புகள்..!!

Oplus_131072

பெண்களுக்கான சில பூஜை அறை குறிப்புகள்

1. பூஜை அறையில் பஞ்சபாத்திர தண்ணீரை தினமும் மாற்றுவது நல்லது.

2. பூஜை செய்யும் போது தெய்வத்திற்கு வைக்கும் வெற்றிலை இரட்டை படையில் இருக்க வேண்டும். வெற்றிலையின் காம்பு பகுதி வலது புறமும், நுனிப் பகுதி இடது புறமும் இருக்க வேண்டும்.

3. பூஜைக்கு எந்த காரணத்தைக் கொண்டும் இரும்பினால் ஆன பொருட்களை பயன்படுத்தக் கூடாது. செம்பு, பித்தளை, வெள்ளி , மண்ணால் ஆனா பொருட்களை மட்டுமே பயன்படுத்த வேண்டும்.

4. பூஜை அறையில் கண்டிப்பாக கண்ணாடி வைத்திருப்பது நல்லது. கண்ணாடியின் முன் ஒரு கிண்ணத்தில் சில்லறை காசுகளை வைத்து அந்த காசுகளின் பிம்பம் கண்ணாடியில் விழுமாறு வைக்க வேண்டும்.

5. பூஜை அறையில் வைக்கப்படும் காமாட்சி விளக்கினை வெறும் தரையில் வைக்க கூடாது. ஒரு தட்டில் அல்லது சிறிய முக்காலி ஒன்றில் வைத்து தான் விளக்கேற்ற வேண்டும்.

6. பூஜை அறையில் ஒரு சிறிய கிண்ணத்தில் ஏலக்காய், கிராம்பு, பட்டை, பச்சை கற்பூரம் போன்ற வாசனை பொருட்களை வைப்பது நல்லது. ஏன் என்றால் இவற்றில் மகாலட்சுமி வாசம் செய்வதாக ஐதீகம்.

7. அன்னபூரணி சிலை அனைவரின் வீட்டிலும் கட்டாயம் இருக்க வேண்டும். ஒரு தட்டில் கொஞ்சம் அரிசியை போட்டு அதில் அன்னபூரணி சிலையை வைத்து வழிபட வேண்டும்.

8. பூஜை அறையில் கோமாதா படம் அல்லது சிலை வைத்து வழிபட நல்ல பலன்கள் கிடைக்கும்.

9. பூஜை அறையில் போடப்படும் கோலம் அரிசி மாவினால் போடுவது நல்லது.

10. சுவாமிக்கு ஒரு நாள் சூட்டிய மலர்களை மறுநாள் வைத்திருக்க கூடாது. ஏன் என்றால் காய்ந்த மலர்களில் எதிர்மறை சக்தி வெளிப்படும். எனவே பூஜை அறையில் வைக்கும் பூக்களை தினமும் மாற்ற வேண்டும்….

Read Previous

வெறும் வயிற்றில் சீரக தண்ணீர் குடித்தால்.. நடக்கும் அற்புதம்..!!

Read Next

சுக்கை பற்றாக தலையில் போட்டால் நம் உடலில் நேரும் அதிசயம்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular