பெண்களே உங்களுக்கும் உதட்டுக்கு மேல் ஆண்களைப் போல மீசை முடி முளைக்கிறதா..?? அதற்கான தீர்வு தான் இது..!!
சில பெண்களுக்கு ஆண்களைப் போல உதட்டின் மேல் மீசை முடி முளைத்திருக்கும். அது பெண்கள் முகத்தில் அழகை கெடுப்பதாக இருக்கும். ஒரு சில பெண்கள் முகத்தில் அழகை கெடுப்பதாக இருந்தாலும் பார்லருக்கு சென்று த்ரெட்டிங் செய்து கொள்வார்கள். ஆனால் த்ரெட்டிங் செய்வதால் முடியும் வளர்ச்சி இன்னும் அதிகமாகத்தான் தூண்டப்படுமே தவிர குறையாது என்பது முதலில் பெண்கள் புரிந்து கொள்ள வேண்டும். அவற்றைக் குறைக்க இயற்கையாகவே மருத்துவம் இருக்கிறது. குப்பைமேனி இலை, வேப்பங்கொழுந்து மற்றும் விரலி மஞ்சள் ஆகியவற்றை சம அளவில் எடுத்துக் கொள்ள வேண்டும். இவற்றை மை போல் நன்றாக அரைத்து தூங்கச் செல்வதற்கு முன் மேல் உதட்டில் பூசவும். காலை எழுந்ததும் கழுவிவிடலாம் தொடர்ந்து இரு வாரங்கள் பூசி வந்தால் முடி அல்லது மீசை போல் அருவருப்பாக இருக்கும் முடி நிரந்தரமாக உதிர்ந்து உதடுகள் பளிச்சிடும் மறுபடியும் அந்த இடத்தில் முடி வளராது. எனவே பெண்களே கண்டிப்பா இத ட்ரை பண்ணி பாருங்க.



