Oplus_131072
பெண்கள் நிர்வகிக்கும் வீட்டில் எப்போதும் பணம் பற்றாக்குறை இல்லாமல் இருக்கும் என்று சொல்கிறார்கள் இது உண்மையா???
கண்டிப்பாக நூற்றுக்கு நூறு உண்மை
பெண்கள் நிர்வகிக்கும் வீட்டில் கண்டிப்பாக பணம் பற்றாக்குறை இல்லாமல் இருக்கும்…
ஆண்கள் வந்து எப்போதுமே செலவாளிகள்.. ஆனால் பெண்கள் எப்போதும் சிக்கனமாக இருப்பார்கள்..
ஒரு ஆண் பஸ்ஸில் பயணம் செய்யும்போது தெரிந்தவர்கள் வந்துவிட்டால் அவர்களுக்கும் சேர்த்து டிக்கெட் எடுத்து விடுவான்..
ஆனால் பெண் பஸ்சில் பயணம் செய்து தெரிந்தவர்கள் வந்தாலும் அக்கா நீங்க டிக்கெட் எடுத்துக்கோங்க நான் எனக்கு எடுத்துட்டேன்.. என்று சொல்வார்கள்…
தெருவுல ஏதாவது விற்பனைக்கு வந்தால் அவர்களிடம் பத்து ரூபாய் குறைத்து வாங்க வேண்டும் என்று வாக்குவாதம் செய்து கசறி கசறி வாங்குவார்கள்.
ஆனால் ஆண்கள் கசற மாட்டார்கள் சொன்னதை கொடுத்து வாங்கி விடுவார்கள்…
ஒரு ஆண் தன் குழந்தையை கூட்டிக்கொண்டு கடைக்கு போகிறான் கடையில் தன் குழந்தை கேட்டதெல்லாம் வாங்கி கொடுக்கிறான்.
ஒரு பெண் தன் குழந்தையை கூட்டிகிட்டு கடைக்குப் போகிறாள் ஒரு திங்கும் பொருளை கேட்கிறது!! இப்பதானே வீட்டில் தின்னுட்டு வந்த அதுக்குள்ள என்ன என்று கேட்பார்கள் ஆனால் வாங்கி தர மாட்டார்கள்..
ஆணுக்கும் தன் குழந்தை முக்கியம் தான்!! பெண்ணுக்கும் தன் குழந்தைக்கு முக்கியம் தான்!! ஆனால் ஆண் என்ன நினைப்பான் என்றால் இன்று செலவழித்தால் நாளை சம்பாதித்துக் கொள்ளலாம் என்று நினைப்பான்!!! ஆனால் பெண் அப்படி நினைக்க மாட்டார்கள் இன்று விட்ட நாளை பிடிக்க முடியாது என்று நினைப்பார்கள் !!!
பெண்கள் பணமில்லை பணமில்லை என்று சொல்வார்கள்.. ஆனால் கடு டப்பாவில் ஒளித்து வைத்திருப்பார்கள் பீரோவில் புடவைக்கு அடியிலும் பணத்தை ஓழித்து வைத்திருப்பார்கள்..
அவசர நிலைக்கு பணத்தை கொடுப்பவர்களுக்கு பெண்கள் தான்..
பெண்கள் நிர்வாகிக்கும் வீட்டில் பணம் எப்போதும் இருந்து கொண்டே இருக்கும்… இது என்னுடைய சொந்த அனுபவம்.,.



