சென்னை தாம்பரம் அடுத்த படப்பையில் பைக்கில் சென்ற இருவர், சாலையில் குறுக்கே வந்த மாடு மீது மோதி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மேம்பாலத்தில் ஏறும்போது திடீரென சாலையின் குறுக்கே மாடு ஒன்று வந்துள்ளது. மாட்டின் மீது மோதிய நிலையில் அவர்களது பைக் எதிரே வந்த கார் மீதும் மோதியது. இதில் இரண்டு பேரும் தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். விசாரணையில் அவர்கள் அண்ணா நகரைச் சேர்ந்த நவீன் (19) மற்றும் அவரது தோழி அபிமணி என தெரியவந்துள்ளது.




