’’போராட்டமே வாழ்க்கை’’
♻️போராட்டத்தைச் சந்திக்காத எந்த உயிரும் பூமியில் வாழ இயலாது. பிறப்பு முதல் இறப்பு வரை போராட்டம் இருந்துக் கொண்டே தான் இருக்கிறது…
♻️பிறந்த குழந்தைக் கூட அழுகை என்னும் புரட்சி செய்து தான் தன் தேவைகளைப் பூர்த்தி செய்கிறது…
♻️போராட்டத்தில் பிறந்து, போராட்டத்தில் வளர்ந்து, போராட்டத்தில் மடிவது தான் வாழ்க்கை…
♻️வாழ்க்கையில் தங்கள் கொள்கைகளை நிலைநிறுத்திக் கொள்ள ஒவ்வொரு மனிதனும் இவ்வுலகில் போராட வேண்டியுள்ளது…
♻️மனித வாழ்வே அறைகூவல் நிறைந்தது தான். மனித குலம் காடுகளில் தான் தனது வாழ்வைத் தொடங்கியது. ஒவ்வொரு கணமும் மரணத்தை எதிர்த்துப் போராடியே தன்னைத் தக்க வைத்துக் கொண்டது…
♻️கொடிய விலங்குகள், மலைப்பாம்புகள், நச்சுப் பூச்சிகள் போன்றவற்றை எதிர்த்தே வாழ்ந்து வந்தான் மனிதன். இதற்கிடையே மழை, வெள்ளம், புயல், பூகம்பம் போன்றவையும் மனிதனை எதிர்த்துப் போர் புரிந்தன…
♻️சரியான நேர்மையான வாழ்க்கைப் பயணப் பாதை, முட்கள் நிறைந்த கரடுமுரடான பாதை தான்…
♻️இந்தப் பாதையில் முட்களாகவும், கரடுமுரடான கற்களாகவும், பிறரின் அவமானப் பேச்சுக்களும், பழிச்சொற்களும், நியாயமற்ற விமர்சனங்களும் தான் நிறைந்திருக்கும்…
♻️கப்பல் வடிவமைக்கப்படுவது கரையில் நிறுத்தி வைக்கப்படுவதற்கு அல்ல…!
வாழ்க்கையும் கரையில் நின்று வேடிக்கைப் பார்ப்பதற்கு அல்ல…! வாழ்க்கைக்கு வழிகள் ஆயிரம் இங்கே இருக்கின்றன…
♻️வாழ்வில் இருந்து விலகி ஓடும் மனிதர்களை விட, எதிர்த்து நின்று போராடுகிறவர்களே உயர்ந்த இடம் பெறுகின்றனர்…
♻️வாழ்க்கைப் பாதையில் பயணிக்கின்றோம் என்றால், நாம் நற்சிந்தனைகளாலும், நற்செயல்களாலும் மலரும் புதிய பயனுள்ள மலர்களால் பாதையை நிரப்ப வேண்டும்…
🏵️வாழ்க்கை என்பது ஒரு போராட்டமே. போராட்டம் இல்லாமல், எதிலும் வெற்றி பெறுவது குதிரைக் கொம்பே…!
⚽போராட்டக் களத்தில் காயப்படுவதுண்டு. நமக்கும் வாழ்வில் காயங்கள் வரலாம். சில ஆறாத வடுவையும் ஏற்படுத்தலாம்…
மனம் தளர்ந்து விட வேண்டாம்…



