போரை அறிவித்த பாகிஸ்தான் தீவிரவாதிகள்..!! காஷ்மீரில் பரபரப்பு..!!

கடந்த சில நாட்களாக இந்தியா மட்டும் இல்லாமல் உலகமே பரபரப்பாக இருக்கும் காரணம் இந்தியாவிற்கும் பாகிஸ்தானில் இருக்கும் பயங்கரவாதிகளுக்கும் ஏற்பட்டுள்ள பிரச்சினைதான். கடந்த சில நாட்களுக்கு முன்பாக இரண்டு பயங்கரவாதிகள் 28 சாதாரண குடிமக்களை கொன்று குவித்தது ஒரு பெரும் பேசும் பொருளாகவே மாறி உள்ளது. அதன் பிறகு பாகிஸ்தானும் சரி இந்தியாவும் சரி போருக்கு தயாராகிக் கொண்டே வருகிறது.

அந்த வகையில் இப்போது பாகிஸ்தானின் ஆதரவில் செயல்பட்டு வரும் ஹிஸ்புல் முஜாகிதீன் என்கின்ற தீவிரவாத அமைப்பு இந்தியாவுக்கு எதிராக போரை நடத்தப் போவதாக அறிவித்துள்ளது. ஜம்மு காஷ்மீரில் ஆயுதப் போராட்டத்தை தொடங்க தயாராக இருப்பதாகவும் அனைத்து தீவிரவாத அமைப்புகள் ஒன்றிணைந்து செயல்பட போவதாகவும் அந்த அமைப்பு அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளது.

மேலும் அல்லாவின் ஆதரவில் இது நிகழ்த்தி காட்டப்படும் எனவும் காஷ்மீர் ஜிகாத் போராட்டம் நடக்கும் என்றும் அந்த அமைப்பு கூறியுள்ளது. இந்தியா இத்தனை நாளாக போரை நடத்தாமல் பயங்கரவாதிகளை மட்டும் தாக்கி அமைதியாகவே இருந்து வருகிறது. ஆனால் போர் ஒன்று நடந்தால் நிச்சயமாக இந்தியா தான் வெற்றி பெறும் என்று அனைவராலும் யோசிக்கப்படுகிறது. முக்கிய தேசங்களான அமெரிக்கா மற்றும் சீனா எந்த நாடுகளிடையே கைகோர்க்கும் என்றும் பார்க்கப்படுகிறது.

Read Previous

சட்னியை இப்படி செய்தால் யாருக்குத்தான் புடிக்காது..!! சத்தான மற்றும் சுவையான செய்முறை இதோ..!!

Read Next

மெய்யழகன் என்னும் காவியம்..!! மனம் உருகி பேசிய நேச்சுரல் ஸ்டார் நானி..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular