மஞ்சள், பால், மிளகின் ரகசியம் பற்றி உங்களுக்கு தெரியுமா..?? கண்டிப்பா தெரிஞ்சுக்கோங்க..!!
மஞ்சள் பால் மிளகின் ரகசியம் பற்றி உங்களுக்கு தெரியுமா.. தெரியாதவர்கள் கண்டிப்பாக இந்த பதிவை படித்து தெரிந்து கொள்ளுங்கள். ஒருவர் விடாமல் அடிக்கடி இரும்பி கொண்டிருப்பவர்கள் ஆக இருந்தால் நெஞ்சில் சளி உறைந்து இருப்பதாக அர்த்தம். இவ்வாறு இருமல் மற்றும் சளி தொல்லையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அரு மருந்து தான் இந்த மஞ்சள் பால் மற்றும் மிளகு. இதனை குறைந்தது ஒரு வாரத்திற்கு இரவில் ஒரு டம்ளர் பாலில் ஒரு சிட்டிகை அளவுக்கு மஞ்சள் தூள் மற்றும் மிளகுத்தூளை சேர்த்து அருந்தி வரவேண்டும் இவ்வாறு அருந்தி வந்தால் நான்கு ஐந்து நாளிலேயே சளி மற்றும் இருமல் பறந்தோடி விடும். பொதுவாக மஞ்சள் ஒரு நோய் எதிர்ப்பு சக்தி கொண்டது இது உடலில் உள்ள நோய்க்கிருமிகளை அழித்தெடுக்கும் ஆற்றல் பெற்றது. அதுமட்டுமின்றி மஞ்சள் கிருமி நாசினியாகவும் செயல்படுவதால் உடலில் இருக்கும் நோய் கிருமிகளை அழிக்கும் சக்தி இதற்கு அதிகம். அதேபோல மிளகுக்கும் அதீத மருத்துவ சக்தி உள்ளது உடலில் உருவாகும் வாய்வு தொந்தரவுகளை அரபி நீக்குகிறது சளியை விரட்டும் சத்து மிளகுக்கு உள்ளது. மிளகின் காரமும் மஞ்சளின் நோய் எதிர்ப்பு சக்தியும் ஒருங்கே உடலில் சேரும்போது இருமல் மற்றும் சளி சரியாகிவிடும்.




