இங்குள்ள பல பேர் ஒரு விஷயத்துக்கு அடிமையாக கிடைக்கின்றனர். அதனால் அவர்கள் வீட்டில் இருக்கும் அனைவரும் மிகவும் வருத்தப்பட்டும் வருவார்கள். அதுதான் மது மட்டும் புகைப்பழக்கம். இந்த பிரச்சனை பத்துக்கு எட்டு வீட்டில் ஆவது இருக்கும். இதனால் பிரச்சனைகள் பல இருக்கிறது என்று தெரிந்தாலும் இன்று விஞ்ஞானிகள் அதில் இருக்கும் மற்றொரு பாதிப்பை தெரிவித்துள்ளனர்.
மது அருந்துதல் மற்றும் புகைப்பிடித்தல் நமது மன நலனை பாதிக்கும் என்று விஞ்ஞானிகள் கூறியுள்ளனர். அதற்குக் காரணம் மது அருந்துவதால் மூளையின் அமிக்தாலா மற்றும் ஹிப்போகேம்பஸ் எனப்படும் பகுதி சுருங்குவதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
இது மது அருந்துவதால் மட்டும் இல்லாமல் புகை பிடிப்பதாலும் நடக்கும் என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர். அதனால் தீவிரமான மது மற்றும் புகைப்பழக்கம் மூளையின் செயல் திறனை குறைத்து மனநல பாதிப்பை அதிகரிக்கும் என்று விஞ்ஞானிகள் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.




