மத்தி மீன் சாப்பிட்டால் உடலில் நடக்கும் அற்புதங்களை பாருங்க..!! பார்த்து பயன்பெறுங்கள்..!!

மத்தி மீன் என்பது விலை மலிவாகக் கிடைக்கும், மிகவும் சுவையுள்ள மற்றும் மருத்துவக் குணங்கள் நிறைந்த ஒரு மீன் வகையாகும். இந்த மீன் வெளிர் வெள்ளை நிறத்தில் தோற்றமளிக்கிறது; முதுகுப்பகுதி கரும்பச்சை நிறத்தில் காணப்படும். சூடை மீனை ஒத்த தோற்றம் கொண்ட இது, பெரும்பாலும் கைஅங்குல அளவிற்கு வளரும்.

இந்த மீன் கேரளா, ஆந்திரா மற்றும் கர்நாடக மாநிலங்களில் மக்கள் விரும்பி சமைக்கும் முக்கியமான மீன்வகையாகும். சிறந்த சுவை மற்றும் மலிவான விலை (ரூ.50க்கும் குறைவாக ஒரு கிலோ) என்பதாலேயே மக்கள் இதனை அடிக்கடி வாங்கி உணவில் சேர்க்கின்றனர்.

மத்தி மீனின் மருத்துவ நன்மைகள்:

ஊட்டச்சத்துக்கள் நிறைந்தது:

மத்தி மீனில் ஒமேகா-3 பேட்டி ஆசிட், கால்சியம், புரோட்டீன், நல்ல கொழுப்பு, வைட்டமின் டி போன்றவை அதிகளவில் உள்ளன.

இதய ஆரோக்கியம்:

ஒமேகா-3 ஆசிட் இதயத்தை பாதுகாக்கிறது, கெட்ட கொலஸ்ட்ராலை குறைத்து நல்ல கொலஸ்ட்ராலை அதிகரிக்கிறது.

எலும்பு மற்றும் பல் ஆரோக்கியம்:

இதில் உள்ள கால்சியம் மற்றும் வைட்டமின் டி, எலும்புகளையும் பற்களையும் பலப்படுத்தும்.

இரத்த ஓட்டத்தை மேம்படுத்தும்:

ஃபோலேட், செனிலியம், பாஸ்பரஸ் மற்றும் வைட்டமின் B12 ஆகியவை இரத்த ஓட்டத்தை சீராக வைத்து, இரத்த உறைதல்களைத் தடுக்கும்.

கண் பார்வைக்கு உதவுகிறது:

வாரத்தில் ஒருமுறை மத்தி மீன் சாப்பிடுவதால் கண் பார்வை பாதிப்புகளைத் தடுப்பதற்கும் உதவுகிறது.

Read Previous

உங்களுக்கு எடை இழக்க ஆசை இருக்கா..?? இந்த பானத்தை வாரத்தில் இரண்டு முறை குடிங்க போதும்..!!

Read Next

நோய் தாக்காமல் இருப்பதற்கான இயற்கை மருந்துகள் இவைகள்தான்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular