மலையாள நடிகை நவ்யா நாயர் தமிழில் மாயக்கண்ணாடி, ஆடும் கூத்து உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். அவர் ஆஸ்திரேலியாவின் விக்டோரியாவில் நடைபெற்ற ஓணம் பண்டிகை கொண்டாட்டத்திற்கு சென்ற போது 15 செ.மீ. அளவு கொண்ட மல்லிகைப்பூவை கொண்டு சென்றதாக தெரிகிறது. இதையடுத்து அவருக்கு விமான நிலையத்திலே ரூ.1.25 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது. ஆஸ்திரேலியாவில் மல்லிகைப்பூ உள்ளிட்ட தாவரப் பொருட்களை விமானத்தில் கொண்டு செல்ல அனுமதி இல்லை.




