Oplus_131072
மல்லி சிக்கன்…. எப்படி செய்யறதுன்னு இந்த பதிவில் பார்க்கலாம். அட ஆமாங்க நிறைய வகையான சிக்கன் ரெசிபி இருந்தாலும் இந்த மல்லி சிக்கன் ரெசிபி கூடுதல் சுவை ஆகவும் சாப்பிடுறதுக்கும் ரொம்ப அட்டகாசமா இருக்கும். பலருக்கும் பலவிதமான சிக்கன் ரெசிபிஸ் குழம்பு வகைகள் கிரேவி வகைகள் தெரிஞ்சாலும் இந்த மல்லி சிக்கன் எப்படி செஞ்சாலும் நல்லாவே வரலப்பா அப்படின்னு சொல்றவங்க கண்டிப்பா இந்த ரெசிபியை செஞ்சு பாருங்க வீட்ல இருக்க எல்லாரும் விரும்பி சாப்பிடுவாங்க.
தேவையான பொருட்கள்:
சிக்கன் துண்டுகள் -1 கிலோ
கொத்தமல்லி இலை -2கட்டு (சுத்தம் செய்து நறுக்கியது)
புதினா இலை -1 கட்டு (சுத்தம் செய்து நறுக்கியது)
வெங்காயம் -3 (நறுக்கியது)
இஞ்சி, பூண்டு விழுது- 2 டீஸ்பூன்
பச்சை மிளகாய் – 4 (நறுக்கியது)
தயிர் – 250 மில்லி லிட்டர்
தனியா தூள் – 3 டீஸ்பூன்
சீரகத்தூள் – 11/2 டீஸ்பூன்
மிளகாய்த்தூள் -1/2 டீஸ்பூன்
உப்பு, எண்ணெய் -தேவைக்கேற்ப
செய்முறை:
தயிரில் பாதி அளவு மிளகாய்த்தூள், உப்பு சேர்த்து கலந்து சிக்கனை 15 நிமிடங்கள் ஊற வைக்கவும்.
ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் பூண்டு, இஞ்சி விழுதை வதக்கவும். பச்சைமிளகாய், சீரகம், தனியா தூள் சேர்த்து கிளறவும்.
சிக்கன் துண்டுகளை வடித்து கடாயில் சேர்த்து அதிக பட்ச தீயில் 5 நிமிடங்கள் வேக வைக்கவும். மீதமுள்ள தயிரை சேர்க்கவும். அதோடு கொத்தமல்லி இலை, புதினாவை சேர்த்து கிளறவும்.மூடியை மூடி சிக்கன் வேகும்வரை குறைந்த தீயில் வைத்திருக்கவும். வெந்ததும் இறக்கி பரிமாறவும். இப்போது சூடான தனியா சிக்கன் ரெடி…




