மிகவும் மோசமான பேட்டிங்.. வெறும் 46 ரன்களுக்கு ஆட்டமிழந்த இந்திய அணி.
பெங்களூருவில் நடைபெற்று வரும் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி மிகவும் மோசமாக விளையாடுகிறது.
நியூசிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் முதல் நாள் ஆட்டம் டாஸ் போடாமலேயே கைவிடப்பட்ட நிலையில் இன்று இரண்டாம் நாள் ஆட்டம் டாஸ் வென்று இந்திய அணி பேட்டிங் தேர்வு செய்தது.
ஆட்டத்தின் தொடக்க முதலே இந்திய அணி பேட்ஸ்மேன்கள் தடுமாறி வந்த நிலையில் ஐந்து வீரர்கள் தக் அவுட் ஆனார்கள் உணவு இடைவேளையின் போது இந்திய அணி 3 4 ரன்கள் மட்டும் எடுத்து ஆறு விக்கீட்டுகளை இழந்தது.
இந்த நிலையில் தற்போது இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 31.2 ஓவருக்கு 46 ரன்கள் மட்டுமே எடுத்து அனைத்து விக்கெட்டுகளையும் இழந்துள்ளது.
நியூசிலாந்து தரப்பில் Matt Henry 5 விக்கெட்டுகளை, William ORourke 4 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தியுள்ளார்கள்.




