மியான்மரில் தொடர்ந்து நடைபெறும் சோகம்..!! கொத்து கொத்தாக சாகும் மக்கள்..!!

சில நாட்களுக்கு முன்பு மியான்மரில் அடுத்தடுத்து நிலநடுக்கம் ஏற்பட்டது. மேலும், குறிப்பாக மியான்மரின் தலைநகர் நைபிடாவில் காலை 11.50 மணியளவில் தொடங்கி சில நிமிட இடைவெளிகளில் 3 நிலநடுக்கம் எற்பட்டது. முதலில் ஏற்பட்ட நில நடுக்கம் 7.7 என்கிற ரிக்டர் அளவிலும், 2வது 6.4 ரிக்டர் அளவிலும், 3வது 4 ரிக்டர் என்கிற அளவிலும் பதிவானது. மிகப்பெரிய கட்டிடங்கள் பல சரிந்து விழுந்தது.

இதை போலவே, கட்டுமான பணி நடைபெற்று கொண்டிருந்த ஒரு கட்டிடத்தில் இருந்த மிகப்பெரிய கிரேன் கீழே விழுந்தது.இது போன்று பல சம்பவங்கள் நடைபெற்று அது எல்லாம் சமூகவலைத்தளங்களில் வெளியாகி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியது.

மியான்மரில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் இதுவரை 1700 பேர் வரை உயிரிழந்ததாக தெரியப்படுகிறது. இந்த நிலையில், மியான்மர் ரம்ஜான் பண்டிகைக்காக ஒரே இடத்தில் தொழுகை செய்து கொண்டிருந்தனர். அங்கு இருந்த 700 பேர் நிலநடுக்கத்தின் காரணமாக உயிரிழந்தனர்.

இந்த நிலை மியான்மரில் மட்டுமில்லாமல் தாய்லாந்து பாங்காக் ஆகியவற்றில் அதிக அளவு நிலநடுக்கம் ஏற்பட்டிருக்கிறது. அந்த இடங்களிலும் பல நூறு பேர் உயிரிழந்துவிட்டனர். இதைத்தொடர்ந்து மியான்மர், தாய்லாந்து நாடுகளுக்கு இந்தியாவும் நிவாரண பொருட்களை அனுப்பவதோடு, மீட்பு பணியிலும் கைகோர்க்கவுள்ளது. இதுவரை இந்த அளவுக்கு மியான்மரில் நிலநடுக்கம் ஏற்பட்டு இவ்வளவு உயிர்கள் பறிபோனதில்லை. இந்த நில நடுக்கத்தின் பாதிப்பினால், பல லட்சம் பேர் தங்களின் வாழ்வாதாரங்களை இழந்திருக்கிறார்கள். அதேபோல், பலரும் தங்கள் வீடுகளையும், சொந்தங்களையும் இழந்துள்ளனர்.

Read Previous

வீர தீர சூரன் பாகம்-2 இவ்வளவு வசூல் செய்ததா..!! விக்ரமுக்கு இதில் சந்தோஷமா இல்லையா..!!

Read Next

உளுந்து இல்லாமல் சுவையான சுலபமான முறையில் போண்டா..!! அசத்த வைக்கும் செய்முறை..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular