தென்காசி மாவட்டம் சுந்தரபாண்டியத்தில் முதியோர் இல்லம் செயல்பட்டு வந்தது. இங்கு கடந்த ஜூன் 11ல் உணவு சாப்பிட்ட ஏராளமான முதியவர்கள் உணவு ஒவ்வாமை காரணமாக பாதிக்கப்பட்டனர். இதுவரை 6 பேர் உயிரிழந்து இருக்கின்றனர். முதியோர் இல்லத்தில் நடந்த ஆய்வில் குடிநீரில் ஈ-கோலை பாக்டீரியா இருப்பது உறுதி செய்யப்பட்டது. ஈ-கோலை பாக்டீரியா குடலில் வாழும் தன்மை கொண்டது ஆகும். நோயெதிர்ப்பு சக்தி குறைவாக கொண்டோரை இது தாக்கினால் வாந்தி, வயிற்றுப்போக்கு, காய்ச்சலை ஏற்படுத்தி மரணத்துக்கு காரணமாக அமையும்.



