Oplus_131072
நின்று கொண்டே தண்ணீர் குடிப்பது மூட்டுவலியை ஏற்படுத்துமா…..
தாகம் அதிகம் எடுக்கும்போது பலரும் நின்ற நிலை யிலேயே தண்ணீரை வேகமாக பருகுவார் கள். அப்படி நின்று கொண்டே தண்ணீர் குடிப்பது முழங்கால் களில் பிரச்சினையை ஏற்படுத்தி மூட்டு வலியை உண்டாக் கும் என்று வயதில் மூத்தவர்கள் சிலர் சொல்வதுண்டு. அது எந்த அளவுக்கு உண்மை தெரியுமா?
இந்த விஷயத்தை அறிவியல் ரீதியாக அணுகினால் நின்று கொண்டே தண்ணீர் குடிப்பது முழங்கால்களில் நேரடியாக எதிர்மறையான விளைவுகள் எதையும் ஏற்படுத்தாது. உண்மையில் முழங்கால் பாதிப்புக்கு நின்ற நிலையில் தண்ணீர் குடிப்பது காரணமில்லை. உடல் எடை அதிகரிப்பது, உடலில் வைட்டமின்கள் இல்லாதது, எலும்பு வலிமையின்றி இருப்பதுதான் அதற்கு முக்கிய காரணமாக அமையும்.
நின்று கொண்டே தண்ணீர் குடிப்பதில் உள்ள ஒரே பிரச்சினை என்னவென்றால், தண்ணீர் விரைவாக வயிற்றுக்குள் செல்லும் . அதனால் செரிமான அமைப்பில் சிறிது அழுத்தத்தை ஏற்படுத்தக் கூடும். அதே நேரத்தில், உட்கார்ந்திருக்கும்போது தண்ணீர் குடித்தால் உடல் தளர்வான நிலையில் இருக்கும். தண்ணீர் மெது வாக வயிற்றுக்குள் நுழையும். செரிமானத்தையும் மேம்படுத்தும்.
நின்று கொண்டே தண்ணீர் குடிப்பது முழங்கால்களுக்கு தீங்கும் விளைவிக்கும் என்றோ அல்லது மூட்டுவலிக்கு வழி வகுக்கும் என்றோ அறிவியல் ரீதியாக நிரூபிக்கப்படவில்லை. நின்று கொண்டே தொடர்ந்து வேலை செய்வதும், அதிக எடையைத் தூக்குவதும்தான் முழங்கால் பிரச்சினைகளை அதிகரிக்கச் செய்யும்….



