நாட்டு மக்கள் அனைவரும் தங்களுக்கு வரும் மாத ஊதியத்தில் இருந்து ஒரு பங்கை சேமிப்பு திட்டங்களில் முதலீடு செய்து அதிக லாபத்தை ஈட்டி வருகிறார்கள். மேலும், சிலர் பணி ஓய்வு காலத்தில் நிதி நெருக்கடி நிகழாமல் இருக்க, அரசு மூலம் வழங்கப்படும் பல்வேறு ஓய்வூதிய திட்டங்களில் பணத்தை முதலீடு செய்து மாதந்தோறும் ஓய்வூதியமாக ஒரு குறிப்பிட்ட தொகையை பெற்று வருகிறார்கள். அந்த வகையில், மத்திய அரசால் செயல்படுத்தப்பட்டு வரும் “அடல் பென்ஷன் யோஜனா” என்ற திட்டத்தில், 7 கோடிக்கும் அதிகமானோர் முதலீடு செய்து பயனடைந்து வருகிறார்கள். இதுமட்டுமின்றி, 2024-25 நடப்பாண்டின் முதல் 6 மாதங்களில் 58 லட்சத்திற்கும் மேல் புதிய கணக்குகள் தொடங்கப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும், இந்த திட்டத்தில் நீங்கள் நாள் ஒன்றுக்கு ரூ.7 சேமித்து, மாதந்தோறும் ரூ.5000 எப்படி பெறுவது என்பதை கீழே பார்க்கலாம் வாருங்கள்.
“அடல் பென்ஷன் யோஜனா” திட்டத்தில் 18-40 வயது வரை உள்ளவர்கள் இணையலாம். இந்த திட்டத்தின் முதிர்வு காலம் 20 ஆண்டுகள் ஆகும். உதாரணமாக, இப்போது நீங்கள் நாள் ஒன்றுக்கு ரூ.7 என்ற கணக்கில் பணத்தை சேமிக்கிறீர்கள் என்றால், அது 1 மாதத்திற்கு ரூ.210 கிடைக்கும். அதை நீங்கள் அடல் பென்ஷன் திட்டத்தில் முதலீடு செய்கிறீர்கள் என்றால், 20 ஆண்டு முதிர்வு காலத்திற்கு பிறகு, மாதந்தோறும் ரூ.5000 உங்களுக்கு கிடைக்கும். அதேபோல், தினசரி ரூ.42 சேமித்து, 20 ஆண்டுகள் முதலீடு செய்தால், முதிர்வு காலத்திற்கு பின் மாதந்தோறும் ரூ.10,000 கிடைக்கும். மேலும், இத்திட்டத்தில் தம்பதிகளாக சேர்ந்து முதலீடு செய்யும் பட்சத்தில், அதிக லாபத்தை நீங்கள் பெறலாம்.




