ரேஷன் கடை ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ் 20 % ஆக உயர்வு..!! முதல்வர் வெளியிட்ட ஹாப்பி நியூஸ்..!!

தமிழகத்தில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு அரசு ஊழியர்களுக்கு பல்வேறு அறிவிப்புகள் தொடர்ந்து வெளியான வண்ணம் உள்ளது. முதல் கட்டமாக அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி மூன்று சதவீதம் உயர்த்தி அறிவிக்கப்பட்டது. மேலும் அனைத்து அரசு பொதுத்துறை நிறுவனங்களில் C மற்றும் D பிரிவில் பணிபுரியும் பணியாளர்கள் மற்றும் தொழிலாளர்களுக்கு 20 சதவீதம் வரை ஊதியம் மற்றும் கருணைத் தொகை வழங்கப்படும் என்று அறிவிப்புகள் வெளியானது.

இந்நிலையில், ரேஷன் கடை ஊழியர்களுக்கு 10 சதவீதம் போனஸ் வழங்கப்பட்டு வந்த நிலையில் இதனை 20 சதவீதமாக உயர்த்த வேண்டுமென ஊழியர்கள் கோரிக்கை வைத்தனர். தற்போது இந்த கோரிக்கையை ஏற்று போனஸ் அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதாவது, போனஸ் சட்டத்தின் கீழ் தற்போது ரேஷன் கடை ஊழியர்களுக்கு 20% தீபாவளி போனஸ் வழங்கப்படும் என தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

 

Read Previous

திருமணம் என்பது சரியான துணையைத் தேடிப்பிடிப்பது அல்ல..!! கடைசிவரை சரியான துணையாக இருப்பதே..!!

Read Next

கணவன் மனைவி உறவு சந்தோஷமாக இருக்க சில வழிகள்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular