ஆந்திரா: திருமலை திருப்பதி ஏழுமலையான் கோயில் லட்டு பிரசாதத்தின் விலை உயர்வு குறித்த செய்திகள் முற்றிலும் தவறானவை என்றும், சமூக வலைதளங்களில் பரப்பப்படும் தகவல்கள் ஆதாரமற்றவை என்றும் தேவஸ்தான அறங்காவலர் குழுதலைவர் பி.ஆர்.நாயுடு தெரிவித்தார். தேவஸ்தானங்களின் நற்பெயரையும், மாநில அரசின் நற்பெயரையும் கெடுக்கும் நோக்கத்துடன் இதுபோன்ற மலிவான செய்திகள் பரப்பப்படுவதாக அவர் குற்றம்சாட்டினார்.




