வக்ஃப் சட்டத் திருத்த மசோதாவை எதிர்த்து பேசியுள்ள உத்தவ் தாக்கரே..!! என்ன சொன்னார் என்று தெரியுமா..!!

வக்ஃப் சட்டத் திருத்த மசோதா அமல்படுத்தப்பட்டதிலிருந்தே பலர் இதற்கு எதிராகவும் சிலர் இதற்கு ஆதரவாகவும் போராடி வருகின்றனர். இந்த மசோதா அமல்படுத்தப்பட்டதால் முஸ்லிம்களுக்கு பெரும் பாதிப்பு ஏற்படும் என்று அனைவரும் கூறி வருகின்ற நிலையில் ஒரு சிலர் இந்த மசோதாவிற்கு எதிராக பேட்டி அளித்து வருகின்றனர். அந்த வகையில் உத்தவ் தாக்கரே என்ன கூறியுள்ளார் என்று தெரியுமா. அதை இந்த பதிவில் காண்போம்.

வக்ஃப் சட்டத் திருத்த மசோதா அமல்படுத்தப்பட்டதை பற்றி கூறிய மகாராஷ்டிராவின் முன்னாள் முதல்வரான உத்தவ் தாக்கரே பாஜக இனி எந்த மதத்தையும் விட்டு வைக்கப் போறதில்லை என்றார். இதற்கு அடுத்தது கிறிஸ்தவர்கள், சமணர்கள், பவுத்தர்கள், மற்றும் இந்து கோயில்களை குறி வைத்துள்ளதாக இவர் கூறியுள்ளார். பாஜகவிற்கு எந்த மதத்தின் மீதும் அக்கறையில்லை என்றும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.

பாஜக செய்யும் தவறுகளை அனைத்து மக்களும் கண் திறந்து பார்க்க வேண்டும் என்று கூறியுள்ளார். இவரின் பேச்சுக்கு பலர் ஆதரவு தெரிவித்து வருகின்றனர். சமூக வலைத்தளங்களிலும் இவர் கூறியது வைரலாகி வருகிறது.

Read Previous

நீரிழிவு நோய் எப்படி உண்டாகிறது?.. நோய் பற்றி அவசியம் தெரிந்துக் கொள்ளுங்கள்..!!

Read Next

ரூ.2,50,000/- வரை மாத ஊதியத்துடன் ஒரு அருமையான வேலைவாய்ப்பு..!! அடித்தது முகப்பெரும் ஜாக்பாட்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular