கடந்த சில நாட்களாக கோடை வெயில் அதிகமாக இருக்கிறது. வழக்கத்திற்கு மாறாக கோடை வெயில் அதிகமாக இருந்து வரும் நிலையில் ஒரு சில நாட்களாக தமிழகத்தில் அங்கங்கு பரவலாக மழை பெய்து வருகின்றது. அதுவும் கடந்த இரண்டு மூன்று நாட்களாக நிறைய இடங்களில் பலத்த மழை பெய்து வருகிறது. மேலும் இன்று சென்னை வானிலை ஆய்வு மையம் ஒரு புதிய அறிவிப்பை தெரிவித்துள்ளது.
அதாவது வங்க கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி காலை 8:30 மணி அளவில் உருவானதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இந்தக் காற்றழுத்த தாழ்வு பகுதியின் தாக்கம் தமிழகத்தில் மிதமான மலைக்கு வாய்ப்பு அளிக்கும் என்றும் கூறியுள்ளது.
இது மட்டுமில்லாமல் வங்க கடலில் இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி நாளை வரை வடமேற்கு திசையில் நகரும் என்றும் அதற்கு அடுத்து 48 மணி நேரத்தில் மேற்கு மத்திய கடலில் வடக்கு நோக்கி நகரம் என்றும் கணித்துள்ளது. இதுவரை தமிழகத்தில் வெயிலும் மலையும் மாறி மாறி வந்து கொண்டிருப்பதனால் மக்கள் குழப்பத்தில் இருக்கின்றனர்.




