கேரளாவில் வறுமையை ஒழிக்கும் நோக்கில் 2021ஆம் ஆண்டு திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. இத்திட்டத்தின் கீழ், 64,060 குடும்பங்கள் வறுமையில் இருப்பது கண்டறியப்பட்டு, அவர்களில் சுமார் 4,000 பேருக்கு புதிய வீடுகள், 1,300 பேருக்கு நிலம், 5,700 பேருக்கு வீடுகளைப் புதுப்பிக்க தலா ரூ.2 லட்சம், மற்றும் 1,04,000 பேருக்கு அடிப்படை வசதிகள் செய்து தரப்பட்டன. இதனால் கேரளா வறுமை இல்லாத முதல் மாநிலமாக மாறியுள்ளது. இதை வருகிற 1ஆம் தேதி முதலமைச்சர் பினராயி விஜயன் விழா நடத்தி அறிவிக்க உள்ளார்.





