இந்த நவீன காலகட்டத்தில் நம்மில் பல பேர் அடுக்குமாடி குடியிருப்பில் தான் வசித்து வருகின்றோம். இடப்பற்றாக்குறை காரணமாக நாம் அனைவரும் துவைத்த துணிகளை வீட்டிற்குள்ளேயே தான் காய வைத்து வருகிறோம். இதன் காரணம் அடுக்குமாடி குடியிருப்புகளில் நம்மால் வெளியில் காய வைக்க முடியாது. அல்லது மழைக்காலங்களிலும் இப்படி நாம் செய்வது வழக்கம். ஆனால் அப்படி செய்வதனால் ஏற்படும் தீமைகள் என்னென்னவென்று உங்களுக்கு தெரியுமா. அதை இந்த பதிவில் தெளிவாக காண்போம்.
துணிகளை துவைத்த பின் வெயிலில் காய வைக்க வேண்டும். அப்படி செய்யாமல் வீட்டிலேயே துணியை காய வைத்தால் கண்ணுக்குத் தெரியாத பூஞ்சைகள் மற்றும் பாக்டீரியாக்கள் வீட்டுக்குள் வசிக்கத் தொடங்கிவிடும். இப்படி நாம் செய்து வருவதால் நமது வீட்டுக்குள் கிருமிகள் நிறைய தங்கும அபாயம் ஏற்படுகிறது.
இதனால் நமது உடலுக்கு பல பாதிப்புகள் ஏற்படும். நமது உடலுக்கு ஒவ்வாமை மற்றும் பல பிரச்சனைகள் ஏற்படும் அபாயம் அதிகமாகிவிடும். ஆகையால் வீட்டிற்குள் துணியை காய வைக்காமல் முடிந்த அளவு வெயிலில் காய வைக்க வேண்டும் என்று மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர்.




