வீட்டில் செல்வம் செழிக்க என்ன வழி?.. செல்வம் செழிக்க என்ன செய்ய வேண்டும்..!!

1.வாசற்படி, உரல், ஆட்டுக்கல், அம்மி இவைகளில் உட்காரக் கூடாது.

2.ஒருவருக்கு பணம் கொடுக்க வேண்டுமென்றால், வாசல் படியில் நின்று கொண்டு கொடுக்கக் கூடாது. கொடுப்பவரும், வாங்குபவரும் வாசல் படிக்கு உள்ளே இருந்து, கொடுக்கவும் வாங்கவும் வேண்டும்.

3.உங்கள் வீடுகளில் லக்ஷ்மி கடாக்ஷம் தழைத்து செல்வம் பெருக, வெற்றிலை, வாழையிலை இவைகளை வாட விடக் கூடாது.

4.வெற்றிலையை தரையில் வைக்கக்கூடாது. சுண்ணாம்பு இல்லாமல் வெற்றிலையை போடக் கூடாது, பிரம்மச்சாரிகள் தாம்பூலம் உட்கொள்ளக் கூடாது.

5.உப்பை தரையில் சிந்தக்கூடாது.அரிசியை கழுவும் போது, தரையில் சிந்தக் கூடாது.

6.பகலில், குப்பையை வீட்டினுள் எந்த மூலையிலும் குவித்து வைக்கக் கூடாது.

7.இரவில் வீட்டைப் பெருக்கினால், குப்பையை வெளியே கொட்டக் கூடாது. வீட்டில் தூசி, ஒட்டடை, சேரவிடாது, அடைசல்கள் இன்றி சுத்தமாக இருப்பது அவசியம்.

8.அன்னம், உப்பு, நெய் இவைகளைக் கையால் பரிமாறக் கூடாது.கரண்டியால் மட்டுமே பரிமாறவேண்டும். கையால் பரிமாறப்பட்ட அன்னம், உப்பு, நெய் இவை கோ மாமிசத்துக்கு சமமாகப் பார்க்கப்படுகின்றது.

9.செல்வச் செழிப்போடு வாழ நாம் வாழும் வீட்டில் துர்நாற்றம் வீசக் கூடாது; அப்படி வீசினால், பண வரவு குறைந்து கொண்டே இருக்கும்.

10.செல்வச் செழிப்போடு வாழ நமது வீட்டில் நமது ஆடைகள், துணிகள் சிதறிக் கிடக்கக் கூடாது. நாம் பயன்படுத்திய ஆடைகளை…. ஒரு தனி பெட்டியிலும், புதிய ஆடைகளை இன்னொரு பெட்டியிலும் போட்டு வைப்பது அவசியம்.

11.நமது வீட்டிற்குள் நுழைந்ததும், எப்போதும் நறுமணம் வீச வேண்டும். அப்படி இருந்தால்,செல்வம் சேரத் துவங்கும். எங்கோ போக வேண்டிய பணம் கூட, நமது வீட்டை நோக்கி வரும். அதே சமயம் அனாவசியமான செலவுகளும் குறையும்.

12.துணி மணிகளை உடுத்திக் கொண்டே தைக்கக் கூடாது, அதிகமாகக் கிழிந்த துணிகளை உடுத்த கூடாது.

13.ஈரத் துணி அணிந்து பூஜை செய்யக்கூடாது, சாம்பிராணி உள்ளிட்ட நறுமணப் பொருட்களை அடிக்கடி வீட்டில் உபயோகிக்க வேண்டும்.

14.வெள்ளிக் கிழமைகளில் மாலை 5 மணிக்குள், நமது வீட்டை பெருக்கி, சுத்தம் செய்துவிட வேண்டும்.

15. தினசரி மாலை வேளையில், தவறாமல் நம் வீட்டு பூஜையறையில் நல்லெண்ணெய் அல்லது நெய் தீபம் கட்டாயம் ஏற்ற வேண்டும்.

Read Previous

உன் ஆபாச படத்தை வெளியிடுவேன்..!! பெண்ணை மிரட்டிய இளைஞர் கைது..!!

Read Next

உடனே அப்ளை பண்ணுங்க..!! ரூ.1,51,100/- சம்பளத்தில் டிகிரி முடித்தவர்களுக்கான வேலை..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular