வெங்காயம் பயன்கள்..!! தெரிந்து கொள்வோம்..!!

வெங்காயம் பயன்கள்:-

 

வெங்காயத்தை வெட்டினால் கண் எரியும். ஆனால் அதன் மூலம் சருமம் அடையும் பலனையும் நாம் அறிந்து கொள்வதில்லை. நம் முன்னோர்கள் அதன் மருத்துவ குணத்தை அறிந்து வைத்திருந்தனர். ஆனால் இக்காலத்து தலைமுறையினர் அதன் தன்மையை விளையாட்டாக எண்ணி விடுகின்றனர். இதை தவிர்த்து வெங்காயத்தின் பயனை அறிந்து கொள்வோமா?

 

இதயத்தை பலப்படுத்த வெங்காயம்இதயம் சம்பந்தமான பல நோய்களுக்கு காரணம் அதிகபடியான கொலஸ்ட்ரால். தற்பொழுது வயதில்குறைந்தவர்களுக்கு கூட இதய சம்பந்தமான நோய்கள் வருகின்றது என்றால் அதற்கு காரணம்கொலஸ்ட்ரால் தான். எனவே இதை கட்டுப்படுத்துவது என்பது நம் தலையாய கடமையாகும். இப்படி அதிகப்படியான கொழுப்பைக் கட்டுப்படுத்த வெங்காயம் உதவுகின்றது. வெங்காயத்தின் தன்மையினால், உடல் மற்றும் இரத்தத்தில் உள்ள அதிகப்படியான கொழுப்பை கட்டுப்படுத்த முடியும். எனவே வெங்காயம் எடுத்து கொண்டு இதய நோயில் இருந்து தப்பித்து கொள்ளுங்கள்

 

.எதிர்ப்பு சக்தி கொடுக்கும் வெங்காயம்வெங்காயத்தில் வைட்டமின்கள், ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள், முக்கியமாக வைட்டமின் சி இருப்பதால் உடலுக்கு தேவையான எதிர்ப்பு சக்தியை வெங்காயத்தால் கொடுக்க முடியும். வெங்காயம் உட்கொள்வதால் மருத்துவர் உதவி இல்லாமல் நம்மை பாதுகாக்க முடியும். பலவித தொற்று நோய்கள் மற்றும் கிருமிகளின் தொல்லைகளில் இருந்து நம்மை பாதுகாக்க வெங்காயம் போதுமானது.மன அழுத்தத்தை போக்கும் வெங்காயம்க்யூயர்சிடின் என்ற மருத்துவ தன்மை வெங்காயத்தில் உள்ளது. இதனால் மன அழுதத்தை கட்டுப்படுத்த முடியும். ஆகையால் அதிகப்படியான வேலை உள்ள நேரத்திலும் மன அழுத்தம் அதிகமுள்ள நிலையிலும் வெங்காயத்தை உட்கொள்வதால் மன அழுத்தம் நேராமல் நம்மை பாதுகாத்து கொள்ள முடியும்.

 

புற்றுநோயை தடுக்கும் வெங்காயம்புற்றுநோயை கண்டு அனைவரும் பயந்து நடுங்குகின்றனர். இந்நோய் வந்தால் செல்கள்வலுவை இழந்து உயிருக்கு ஆபத்து விளைவிக்கின்றது. இந்த நோயை தடுக்கும் தன்மை வெங்காயத்துக்கு உள்ளது. இதில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் புற்று நோயில் இருந்து நம்மை காத்துகொள்ள உதவுகின்றது.சருமத்திற்கு அழகு சேர்க்கும் வெங்காயம்வெங்காயம் உட்கொள்வதற்கு மட்டுமல்ல அழகை பாதுகாக்கவும் தான். இதில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் முகம் பொலிவு அடையவும், சுருக்கம் ஏற்படாமல் இருக்கவும் உதவுகின்றது. தழும்புகளையும் வடுக்களையும்போக்க வெங்காயம் உதவுகின்றது. வயதானால் சருமத்திற்கு வரும் பாதிப்பு அனைத்தையும் வெங்காயத்தால் விரட்ட முடியும்.

Read Previous

தண்ணி மேல மிதக்கக் கூடாது..!! விந்தணு பரிசோதனை வீட்டிலேயே இப்படி செய்யுங்க..!! தெரிஞ்சுக்கோங்க..!!

Read Next

நம்முடைய வாழ்வில் உள்ள சில கசப்பான உண்மைகள்..!! அனைவரும் கண்டிப்பாக தெரிஞ்சுக்கோங்க..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular