மேற்கு வங்காளத்தின் நாடியா மாவட்டத்தில் உள்ள காளிகஞ்சில் இன்று (ஜூன் 23) இடைத்தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டன. இதில் திரிணாமுல் காங்கிரஸ் (டி.எம்.சி) கட்சியினர், வெற்றியை பட்டாசு வெடித்துக் கொண்டாடியுள்ளனர். அப்போது தொண்டர்கள் வீசிய வெடியில் சிக்கி, 9 வயது சிறுமி தமன்னா உயிரிழந்துள்ளார். இந்த சம்பவத்தை தொடர்ந்து, “குற்றவாளிகள் மீது காவல்துறை கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்” என மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி உத்தரவிட்டுள்ளார்.



