வெந்தயம் பலவிதமான பலன்களை கொடுக்கிறது என்பது நமக்கு தெரியும் இருப்பினும் வெந்தயத்தை சாப்பிடுவதற்கு பலரும் விரும்ப மாட்டோம். ஏனென்றால் வெந்தயம் கசப்பு தன்மை கொண்டது என்பதால் பலரும் அதை விரும்ப மாட்டோம் இந்நிலையில் வெந்தயத்தின் கசப்பு தன்மையை நீக்குவது எப்படி என்பதை பற்றி தான் இந்த பதிவில் நாம் பார்க்க பகிறோம்.
சர்க்கரை நோயாளிகள் வெந்தயம் சாப்பிடுவதனால் ஓரளவு பலன் கிட்டும். கசப்பாக இருப்பதனால் சில நபர்களுக்கு சாப்பிட பிடிப்பதில்லை. வெந்தயத்தை தண்ணீரில் ஊறவைத்து முளைப்பு வந்த பின்பு உலர்த்தி சாப்பிடரத்தத்தில் சர்க்கரை குறையும். முளைப்புத்திறன் வந்த பிறகு சாப்பிட நல்ல பலன் கிடைக்கும்.
ஆனால் அதை விட கற்றாழை சாற்றில் வெந்தயத்தை ஊறவைத்து 24 மணி நேரம் கழித்து உலர்த்தி பொடி செய்து சாப்பிட வேண்டும். காற்றாழையை தோல்சீவி நன்கு கழுவி சிறிய சிறிய துண்டுகளாக வெட்டி மிக்ஸியில் போட்டு அரைத்து வடிகட்டாமல் அதில் வெந்தயத்தைப்போட்டு ஊற வைக்க வேண்டும். வெந்தயதின் மேல் காற்றாழை சாறு 5 இன்ச் அதிகமாக இருக்க வேண்டும். ஏனெனில் வெந்தயம் அதிகமாக சாறு இழுக்கும். 24 மணி நேரத்திற்கு பின் வெந்தயத்தை ஒரு தட்டில் பரப்பி உலர்த்தி பொடி செய்து கொள்ள வேண்டும். சர்க்கரை நோய்க்கு இது ஒரு துணை மருந்து. வெந்தயத்தின் கசப்பு சுவை அறவே நீங்கிவிடும்.



