Oplus_131072
“#உடல்_ஊக்க_மருந்து”
வெந்தயம், ஓமம், கருஞ்சீரகம் மூன்றையும் அரைத்து ஒன்றாக கலந்து சாப்பிட்டால் கிடைக்கும் பலன்களை பார்க்கலாம்.
வெந்தயம் 250 கிராம்,
ஓமம் 100 கிராம்,
கருஞ்சீரகம் 50 கிராம்.
ஆகியவற்றை வறுத்து தூளாக்கி ஒன்றாக கலந்து பத்திரப்படுத்தி வைத்துக்கொள்ளவேண்டும். இந்த #உடல்_ஊக்க_கலவையை நாள்தோறும் ஒரு ஸ்பூன் அளவு இரவில் ஒரு டம்ளர் மிதமான சுடுநீரில் கலந்து உணவுக்கு அரை மணிநேரம் முன்னதாக குடித்துவர உடலில் தேங்கி இருக்கும் அனைத்து நச்சு கழிவுகளும் மலம், சிறுநீர் மற்றும் வியர்வை வழியாக வெளியேறிவிடும். தேவையற்ற கொழுப்பை நீக்கி இரத்தம் சுத்திகரிக்கப்பட்டு சீரான இரத்த ஓட்டத்தை ஏற்படுத்தும்.
இரத்த குழாய்களில் உள்ள அடைப்புகள் நீக்கப்பட்டு இருதயம் சீராக இயங்கும். சருமத்தில் உள்ள சுருக்கங்கள் நீங்கிவிடும். உடலில் உறுதியும், தேக மினுமினுப்பும், சுறுசுறுப்பும் உண்டாகும். எலும்புகள் உறுதியடைந்து எலும்பு தேய்மானம் நீங்கும். ஈறுகளில் உள்ள பிரச்சனைகள் நீக்கப்பட்டு பற்கள் வலுவடையும். கண் பார்வை தெளிவடைந்து, நல்ல முடி வளர்ச்சி உண்டாகும். மலச்சிக்கல் நீங்கி, நினைவாற்றல் மேம்படும். கேட்கும் திறன் அதிகரிக்கும். பெண்கள் சம்மந்தப்பட்ட நோய்கள் நீங்கும். பாலியல் பலவீனங்கள் நீங்கிவிடும். நீரிழிவு நோய் கட்டுப்படுத்தும். வெந்தயம், ஓமம், கருஞ்சீரகம் கலவையை 2-3 மாதங்கள் தொடர்ந்து சாப்பிட்டுவர நாட்பட்ட வியாதிகள் அனைத்தும் குறைந்துவிடும்.




