வெள்ளை சர்க்கரை சாப்பிடும் நபரா நீங்கள்..!! உங்களுக்கு இந்த பிரச்சனை நிச்சயம்..!!

இந்த நவீன காலத்தில் நாம் சாப்பிடும் உணவுகளில் இருக்கும் சத்து குறைபாடுகளையும் பக்க விளைவுகளையும் நாம் எண்ணிப் பார்ப்பதே இல்லை. மேலும் ஒரு சிலர் ஒரு உணவில் இருக்கும் சத்து குறைபாடுகளை தெரிந்த பின்பும் அந்த உணவை சாப்பிடுவதை நிறுத்துவதில்லை. அப்படி நாம் அனைவரும் தினமும் செய்யும் தவறு தான் வெள்ளை சர்க்கரையை உட்கொள்வது. அந்த வெள்ளை சர்க்கரையில் இருக்கும் பக்க விளைவுகளை இந்த பதிவில் காண்போம்.

நமது உடலுக்கு ஆரோக்கியம் தரும் உணவுகளையும் ஊட்டச்சத்து அளிக்கும்  உணவுகளையும் சாப்பிடுவது மிகவும் முக்கியம். அதை செய்யாவிட்டாலும் பரவாயில்லை ஆனால் சத்து குறைபாடு உள்ள உணவுகளை சாப்பிடுவதை நிச்சயம் தவிர்க்க வேண்டும்.

இந்த வெள்ளை சர்க்கரை நமது உடல் எடையை அதிகரித்து மார்பக புற்றுநோய் பிரச்சனையை உண்டாக்குகிறது. மேலும் இதை உட்கொள்வதால் நமது உடம்பில் இருக்கும் டிஷ்யூகள் மற்றும் செல்கள் பாதிப்படைய நிறைய வாய்ப்பு இருக்கிறது. அதுமட்டுமில்லாமல் வெள்ளை சர்க்கரை காரணமாக நீரிழிவு மற்றும் இதய நோய் வரும் அபாயம் அதிகம் உள்ளது.

மேலும் இதை உண்பதினால் மனநிலை மாற்றங்கள் மன அழுத்தம் மற்றும் மனசோர்வு ஏற்படும். இது மட்டுமில்லாமல் சரும பிரச்சனைகளான முகப்பரு சரும சுருக்கம் அதிகம் ஏற்படும். ஆகையால் இந்த வெள்ளை சர்க்கரையை முற்றிலும் தவிர்த்து நமது உடலுக்கு ஆரோக்கியம் சேர்க்க நாம் முயற்சி செய்வோம்.

Read Previous

ரூ.40,000/- மாத ஊதியத்துடன் Repco வங்கியில் வேலைவாய்ப்பு..!! உடனே விண்ணப்பியுங்கள்..!!

Read Next

ஒரு போஸ்டரால் உண்டான பூகம்பம்..!! பிரிந்து கிடக்கும் அதிமுக கட்சி..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular