ஒரு போஸ்டரால் உண்டான பூகம்பம்..!! பிரிந்து கிடக்கும் அதிமுக கட்சி..!!

2026 ஆம் ஆண்டு நடைபெற உள்ள தேர்தல் நெருங்க நெருங்க தேர்தல் களம் சூடு பிடித்து வருகிறது. பலர் தங்களது கூட்டணிகளை முடிவு செய்து வருகின்றனர். மேலும் அதிமுகவிலிருந்து ஒரு சிலர் இந்திய பிரதமர் மோடியை அல்லது அமித்ஷாவை சென்று சந்தித்து வருவது நடந்து வருகிறது. இதற்கு இடையே ஒரு சில கட்சிகளில் தங்களுக்குள்ளேயே அடித்து பிரிந்து கிடக்கின்றனர். அப்படி ஒரு பிரச்சனை தான் இப்போது கிளம்பி இருக்கிறது.

அதிமுக கட்சி கடந்த சில வருடங்களாக பல பிரிவுகளாக பிரிந்து கிடப்பது நமக்கு தெரியும். பலர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களுக்கு எதிராகவும் அல்லது ஆதரவாகவும் இருக்கின்றனர். அதேபோல் ஓ பன்னீர்செல்வத்திற்கும் ஆதரவாகவும் எதிராகவும் இருக்கின்றனர். அதனை அடுத்து இப்போது மதுரையில் ஒரு போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது.

அந்தப் போஸ்டரில் இருக்கும் குறிப்புகளை பார்த்தவுடன் நெட்டிசன்கள் விமர்சித்தும் ஷேர் செய்து வருகின்றனர். அந்த போஸ்டர் எடப்பாடி பழனிச்சாமிக்கு எதிராக ஓட்டப்பட்டுள்ளது. மேலும் அதில் செங்கோட்டையனுக்கு ஆதரவு தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தமிழக அரசியல் களத்தில் ஒரு புயலையே உண்ட செய்திருக்கிறது.

அதாவது எடப்பாடி பழனிச்சாமியின் புகைப்படத்தை புறக்கணித்துவிட்டு செங்கோட்டையன், எஸ்.பி. வேலுமணி, தங்கமணி, மற்றும் ராஜன் செல்லப்பா ஆகியோரின் புகைப்படங்கள் அதில் இருக்கின்றன. இதிலும் முக்கியமான விஷயம் என்னவென்றால் அந்த போஸ்டரில் அதிமுக பொதுச்செயலாளர் செங்கோட்டையன் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Read Previous

வெள்ளை சர்க்கரை சாப்பிடும் நபரா நீங்கள்..!! உங்களுக்கு இந்த பிரச்சனை நிச்சயம்..!!

Read Next

உணவுகளை மீண்டும் சூடு படுத்தி சாப்பிடும் பழக்கம் உங்களுக்கு இருக்கிறதா..!! இந்த உணவுகளை சூடு படுத்தி சாப்பிட்டால் அவ்வளவுதான்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular