ராஜஸ்தான் மாநிலம் அல்வாரில் 24 வயது பெண் ஒருவர், மருமகன் முறை உறவுகொண்ட 17 வயது சிறுவனுடன் தகாத உறவில் இருந்துள்ளார். இதனிடையே, அச்சிறுவன் அப்பெண்ணின் அந்தரங்க புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை எடுத்து வைத்து மிரட்டியுள்ளார். இதுகுறித்து அப்பெண் போலீசில் புகார் அளித்த நிலையில், விசாரணையில், அவர்கள் இருவரும் 6 மாதங்களில் 832 முறை தொலைபேசியில் பேசியது தெரியவந்தது. இதையடுத்து அப்பெண் மீது போக்சோ வழக்கு பதியப்பட்டு அவருக்கு 20 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.




