
இந்தியாவின் எதிர்காலத்தை வடிவமைப்பதில் கல்வியின் முக்கியத்துவத்தை தேசியக் கல்வி தினம் எடுத்துரைக்கிறது…
சுதந்திர இந்தியாவின் முதல் கல்வி மந்திரி மவுலானா அபுல் காலம் ஆசாத்தின் பிறந்த நாளை நினைவு கூறும் விதமாக ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 11ம் தேதி தேசிய கல்வி தினம் கொண்டாடப்படுகிறது, அவ்வகையில் இந்த தேசிய கல்வி தினம் கொண்டாடப்படுகிறது மவுலானா அபுல் காலம் ஆசாத், 1947 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15ஆம் தேதி முதல் 1958 ஆம் ஆண்டு பிப்ரவரி இரண்டாம் தேதி வரை கல்வி மந்திரிகாக பணியாற்றியவர், தேசிய கல்வி தினமான இன்று கல்வித்துறையில் அவர் பங்களிப்புகள் நினைவு கூறப்படுகின்றன, கல்வி நிறுவனங்கள் சார்பில் கல்வியின் முக்கியத்துவம் குறித்து கருத்தரங்கங்கள் கட்டுரை போட்டிகள் கல்வி சார்ந்த நிகழ்ச்சிகள் பேச்சு போட்டிகள் ஊர்வலங்கள் நிகழ்த்தப்படுகின்றன இதன் மூலம் எழுத்தறிவின் முக்கியத்துவம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது, இந்தியாவின் எதிர்காலத்தை வடிவமைப்பில் கல்வியின் முக்கியத்துவத்தை இந்த நாள் எடுத்துறைக்கிறது, கல்வி மூலம் பிரகாசமான எதிர்காலத்தை உருவாக்க வேண்டும், தலைமுறைக்கு தரமான கல்வி மற்றும் திறன் மேம்பாட்டிற்கான வாய்ப்புகளை வழங்குவது மிகவும் முக்கியமானது மாணவர்களின் முழுமையான வளர்ச்சியை ஊக்குவிக்கவும் நாட்டை முன்னேற்ற பாதைக்கு கொண்டு செல்லவும் இளைஞர்களுக்கு அதிகாரம் அளிக்கும் வலுவான கல்வி உள் கட்டமைப்பு உருவாக்க மத்திய அரசு செயலாற்றி வருகிறது பல்வேறு முன் முயற்சிகள் மற்றும் அரசியலமைப்பு சட்டங்கள் மூலம் கற்றல் வாய்ப்பு மற்றும் மேம்பாட்டிற்கான வாய்ப்புகளை வழங்குவதில் அரசு குறிப்பிட்ட தக்க முன்னேற்றம் அடைந்துள்ளது..!!