மகாராஷ்டிரா: மும்பை கோரேகான் பகுதியைச் சேர்ந்த ரமேஷ் என்பவரின் மனைவி ஊர்மிளாவுக்கு (44), ஒரு இளைஞருடன் கள்ளத்தொடர்பு இருந்துள்ளது. மேலும், தனது மகளின் காதலனுடன் தகாத உறவில் இருந்துள்ளார். இந்நிலையில், கள்ளக்காதலனுடன் சேர்ந்து வாழ, நகைகளை விற்று ரூ.10 லட்சத்தை அவரிடம் கொடுத்துள்ளார். மேலும், சில நகைகளை மகளின் காதலனுக்கும் கொடுத்துவிட்டு திருட்டுப்பழியை தனது கணவன் மேல் போட்டுள்ளார். போலீசார் விசாரணையில் உண்மை வெளிவர, ஊர்மிளா கைது செய்யப்பட்டுள்ளார்.




