2026ல் நம் இலக்கை அடைவோம்..!! மாநாட்டுக்கு பிறகு விஜய் எழுதிய முதல் கடிதம்..!!

தமிழக வெற்றிக்கழகத்தின் முதல் மாநாடு, கடந்த அக்டோபர் 27ம் தேதி விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் உள்ள வி.சாலையில் நடைபெற்றது. இதில் 10 லட்சம் பேருக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில் தவெக தலைவர் விஜய் தொண்டர்களுக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.

அதில், “அனைத்து மக்களின் அத்தியாவசியத் தேவைகளை நோக்கிய உழைப்பு மட்டுமே இனி நம் அரசியல். அதைச் சாத்தியப்படுத்துதல் மட்டுமே நம் தீவிர அரசியல் செய்தலாக இருக்கும். நம்மைத் தாயுள்ளத்தோடு வரவேற்கும் நம் தமிழ்நாட்டு மக்களுக்காக, இன்னும் அதி தீவிரமாக, தீர்க்கமாக, தீர்மானமாக உழைப்போம். தங்கள் மண்ணைச் சேர்ந்த மகன்களான, மகள்களான நம்மைத் தக்க இடம் நோக்கி, தகுதியான அங்கீகாரம் நோக்கி மக்களே அழைத்துச் செல்வர். எப்போதும் ஆக்கப்பூர்வமான அரசியலையே கையிலெடுப்போம். 2026-ல் நம் இலக்கை அடைவோம்” எனத் தெரிவித்துள்ளார்.

Read Previous

நீங்கள் பணத்தை வீணாக செலவழிக்கிறீங்களா?.. அப்போ இது உங்களுக்குதான்..!!

Read Next

ஒரு மகன் ஒரு முறை தன் தாயிடம் கேட்டான்?.. ஒரு குடும்பம் சிறப்பாக உயர்வது யாரால்?..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular