மத்தியப் பிரதேசம்: அனுப்பிரியா (28) என்ற பெண்ணுக்கும் தீபக் என்பவருக்கும் ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்னர் திருமணமான நிலையில் அனுப்பிரியா 8 மாத கர்ப்பிணியாக இருந்தார். திடீரென நேற்று முன்தினம் (ஜூலை.20) அனுப்பிரியா தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார். “என் மகளை கூடுதல் வரதட்சணை கேட்டு தீபக்கும் அவர் குடும்பமும் கொடுமைப்படுத்தி வந்தனர்” என்று அவரின் தாய் புகார் கொடுத்துள்ளார். போலீஸ் விசாரிக்கிறது.




