ஆணுறுப்பினை ஒழுங்காக சுத்தமாக வைத்துக் கொள்ளாத காரணத்தினால், பலவிதமான சிக்கல்களை தற்பொழுதுள்ள நவீன யுகத்தில், பெரும்பாலான ஆண்கள் சந்திக்கின்றனர். சரியாகப் பராமரிக்காமல் விட்டுவிட்டால், அலர்ஜி, தொற்று நோய் முதல் ஆண்மைக் குறைவு வரை ஏற்படும் வாய்ப்புகள் உள்ளன.
உணவு:
அதிகளவில் கொழுப்பு சேர்ந்த உணவுகளை எடுத்துக் கொள்வதால், உங்களுடைய அடிவயிறு தொங்க ஆரம்பித்துவிடும். அவ்வாறு தொங்க ஆரம்பித்து விட்டால், உங்கள் ஆணுறுப்பால் நீண்ட நேரம் கட்டிலில் தாக்குப் பிடிக்க இயலாது. எனவே, கொழுப்பு உணவுகளை முடிந்தவரைத் தவிர்த்து விட்டு, நார்சத்து நிறைந்த உணவுகள், பழங்கள், கீரைகள் ஆகியவற்றினை எடுத்துக் கொள்ளவும்.
உடைகள்:
உள்ளாடைகளை துவைத்து பயன்படுத்தவும். ஒரு நாளைக்கு, ஒரு உள்ளாடையைப் பயன்படுத்தவும். இன்று பயன்படுத்திய உள்ளாடையை துவைக்காமல், நாளை பயன்படுத்தக் கூடாது. அவ்வாறு, பயன்படுத்தினால், உள்ளாடைகளில் உள்ள பாக்டீரியாக்கள் மூலம் தொற்று நோய் ஏற்படும். மேலும், ஒரு வீட்டில் சகோதரர்கள் இருவர் இருந்தால், இருவரும் தனித் தனியாக தங்கள் உடைகளைப் பயன்படுத்த வேண்டும்.
ஒருவர் பயன்படுத்தியதை மற்றொருவர் பயன்படுத்தக் கூடாது. அவ்வாறு பயன்படுத்தினால், கண்டிப்பாக தொற்று நோய் அலர்ஜி முதலானவை ஏற்படும்.




