மனைவி செய்த காபியில் எறும்பு இறந்து கிடந்ததால் கணவனின் செயல்..!!

கணவன் மனைவி உறவு என்பது காலம் முழுவதும் தொடர்வது, கணவனில் பாதி மனைவியும் மனைவியின் மீதி கணவனும் நிறைந்தது திருமண வாழ்வு அப்படிப்பட்ட திருமண வாழ்வில் ஒருவருக்கொருவர் புரிந்து கொள்வதை தாண்டி விட்டுக்கொடுத்து செல்வதும் மிகவும் முக்கியம்..

கணவனுக்கு வீட்டில் காபி ஊத்தி கொடுத்தால் மனைவி உள்ளே ஒரு எறும்பு கிடந்தது அதை கண்ட கணவன் காப்பியை விட கொதிக்க ஆரம்பித்து விட்டான். காபியை வீசினான் விளைவு சண்டை சந்தோசமான வீடு 3 நாள் துக்கவீடாக மாறியது, இந்த சம்பவம் இன்னொரு வீட்டிலும் நடந்தது. அந்த வீட்டில் உள்ள கணவன் காபியில் செத்து மிதக்கும் இரும்பை எடுத்தான். அவன் மனைவியை அழைத்து மெதுவாக சொன்னான் உன் காபிக்கு என்னை விடவும் தீவிர ரசிகன் இந்த எறும்பு தான் உன் காபிக்காக உயிரையே கொடுத்துவிட்டது பார் இதுபோல் ரசிகர்களை வீணாய் இழந்து விடாதே மனைவி சிரித்தால், தன் தவறை உணர்ந்தாள் அதன் பிறகு அவர்கள் வீட்டு சர்க்கரையை கவனமாக பாதுகாத்தால் அதனால் காபியில் எறும்பு சாகவில்லை அவர்கள் வீட்டின் மகிழ்ச்சி சாகவில்லை வாழ்க்கையை சந்தோஷமாக அமைத்துக் கொள்வதும் சங்கடத்தில் முடிப்பதும் நாம் பிரச்சனைகளை எவ்வாறு கையாளுகிறோம் என்பதில் மட்டுமே தீர்மானிக்கிறது, நமக்கு மட்டும்தான் கோபம் வரும் எனவும் நாம் தவறு செய்யமாட்டோம் எனவும் நினைக்கக் கூடாது தவறுகளை நகைச்சுவையாகவோ அன்பாகவோ சொல்லிப் பாருங்கள் அந்த தவறு மறுபடியும் நடக்காது ஆனால் கோபத்தால் அல்லது அதிகாரத்தால் தவறுகளை சுட்டி காட்டினீர்கள் என்றால் அதைவிட அதிகமான தவறுகள் நடக்கும் என்பதை மறவாதீர்கள்..!!

Read Previous

ஜாக்கிரதை : ஒரே இடத்தில் உட்கார்ந்து வேலை செய்றீங்களா…!!

Read Next

விராட் கோலியை சந்தித்த மாரியப்பன் தங்கவேலு..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular