அரசு பள்ளியில் பயிலும் மாணவ – மாணவிகளின் கற்றல் திறனை மேம்படுத்தும் விதமாக தமிழக அரசு 2021ம் ஆண்டில் இருந்து, ஆண்டுதோறும் மாநில மதிப்பீட்டு புலம் என்ற பெயரில் திறனறிவு தேர்வுகளை பள்ளிக்கல்வித்துறை சார்பில் நடத்தி வருகிறது. அந்த வகையில் இந்த ஆண்டிற்கான தேர்வுகள் இம்மாதம் முதல் நடைபெற உள்ளதால் அதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை அரசு வெளியிட்டுள்ளது.
திறனறிவு தேர்வுக்கான வழிகாட்டு நெறிமுறைகள்:
- திறனறிவு தேர்வுகான முதற்கட்ட தேர்வு அக்டோபர் 7 முதல் 10-ம் தேதி வரையும், 2-ம் கட்ட தேர்வு அக்டோபர் 22 முதல் 25-ம் தேதி வரையும், 3ம் கட்ட தேர்வு நவம்பர் 26 முதல் 29ம் தேதியும், 4-ம் கட்ட தேர்வு ஜனவரி 28 முதல் 31-ம் தேதி வரை நடைபெற உள்ளது.
- இத்தகைய தேர்வுக்கான வினாத்தாள் மாநில மதிப்பீட்டுபுலம் /exam.tnschools.gov.in/ என்ற இணையதளத்தில் பதிவேற்றம் செய்திருக்கும். அதை, மாணவர்கள் தேர்வு நடக்கும் 1 நாளைக்கு முன்னதாக பதிவிறக்கம் செய்து கொள்ள வேண்டும். வினாத்தாள் பதிவிறக்கம் செய்வதில் ஏதேனும் சிக்கல் ஏற்பட்டால் 14417 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம்.
- மேலும், இத்தேர்வை அந்த வகுப்பாசிரியர் அவரது பாடவேளை சார்ந்த தேதியில் நடத்த வேண்டும் என்றும் தேர்வுகள் முடிந்த பிறகு விடைத்தாள்களை திருத்திவிட்டு, அதை வகுப்பு ஆசிரியர்கள் முறையாக பராமரிக்க வேண்டும் என்று பள்ளி கல்வித்துறை தகவல் தெரிவித்துள்ளது.




