உங்கள் உறவு பிரகாசமாய் ஜொலிக்க.. நீங்கள் கடைப்பிடிக்க வேண்டிய முக்கியமான விஷயங்கள்..!!

உங்கள் உறவு பிரகாசமாய் ஜொலிக்க.. நீங்கள் கடைப்பிடிக்க வேண்டிய முக்கியமான விஷயங்கள்..!!

எந்த உறவாக இருந்தாலும் சரி பிடிவாதம் என்பது அனைத்து வகையான உறவுகளிலுமே இருக்கும். குறிப்பாக கணவன் மனைவி உறவுகளில் பிடிவாதம் என்பது முக்கியமான ஒரு இடத்தை பிடிக்கும். ஏனென்றால், இருவருக்கும் இடையில் சண்டை வரும் பொழுது பிடிவாதமாக யாராவது ஒருத்தர் இருப்பார்கள். கடைசியில் அவர்கள் தான் அது தப்பாகவே இருந்தாலும் பிடிவாதமாக சொல்லி அந்த சண்டையை ஜெயிப்பார்கள். இந்நிலையில், பிடிவாதம் கொண்டு ஜெயிச்சவர்களை விட, அன்பு கொண்டு தோத்தவர்கள் தான் சிறந்தவர்கள். ஆம் ஆம் எந்த ஒரு உறவிலும் அன்பு ஒன்று அளவு கடந்து இருந்தால் அந்த உறவு ஒருபோதும் முறியாது.

குறிப்பாக காதலில் ஆதிக்கத்தை விட அன்பு தான் முன்னுரிமை நாம் அன்புக்கு முன்னுரிமை கொடுக்கும்போது மற்ற நபரும் அந்த அன்பை எடுத்துக் கொண்டு அந்த பிரச்சினைக்கான சமரச நிலைக்கு வருவார்கள். இறுதியில் உண்மையான பலம் எதுவென்று கேட்டால் அது அன்பு தான் பிடிவாதம் இல்லை. நாம் நமக்கு பிடித்தவருக்காக அடிபணிவதில் ஒன்றும் தவறில்லை. நாம் நம்மை பிடித்தவருக்காக அடிபணிவதில் நமக்குள் இருக்கும் உறவின் ஆழம் என்ன வென்று தெரியும். அதேபோலத்தான் சற்ற அடிபணிந்து அன்பை காட்டுவதன் மூலம் உறவுகளை மட்டுமல்ல நமக்குள்ளும் வளர்ச்சிக்கான இடத்தை உருவாக்குகிறோம் என்று அர்த்தம். இந்த விஷயங்களை எல்லாம் பாலோ செய்தாலே போதும் நம் உறவு பிரகாசமாய் ஜொலிக்கும்.

Read Previous

பரோட்டா சால்னாவால் உரிமையாளருக்கு நடந்த விபரீதம்..!! அச்சத்தில் பிரியாணி கடை ஊழியர்கள்..!!!

Read Next

விரட்டி விரட்டி கைது செய்யப்படும் சாம்சங் தொழிலாளர்கள்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular