ஆட்சி அமைய எந்த தியாகத்துக்கும் தயார்..!! எடப்பாடி பழனிசாமி முக்கிய கருத்து..!!
அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் 53வது ஆண்டு பொதுக்கூட்டம் 2024 அக்டோபர் 17 முதல் 20 வரை நடைபெறும் என அதிமுக தலைமை அறிவித்திருந்தது. இந்நிலையில் தற்போது அக்கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில், ‘2026ல் அதிமுக ஆட்சி அமைவதற்கு எந்தவொரு தியாகத்தையும் செய்ய தயாராக இருக்கிறேன்’. ‘உட்பகை கொண்டவர்கள் இனி நம் இயக்கத்திற்கு வேண்டாம் என்பதில் உறுதியோடு நிற்போம்’ என்று தெரிவித்துள்ளார் . இதை வைத்து பார்க்கும் பொழுது இனி அதிமுகவில் ஓபிஎஸ், டிடிவி தினகரன் மற்றும் சசிகலா ஆகியோர் இணைய வாய்ப்பில்லை என தெரியவந்துள்ளது.




