மழையால் அவதிப்படுபவர்கள் கேப்டன் ஆலயத்தில் வந்து தங்கிக் கொள்ளலாம்..!!

பிரேமலதா விஜயகாந்த் அவர்களின் உயர்ந்த மனசு.. மழையால் அவதிப்படுபவர்கள் கேப்டன் ஆலயத்தில் வந்து தங்கிக் கொள்ளலாம்..

வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வினால் சென்னை முதல் பல மாவட்டங்களுக்கு ஆபத்து என்று ரெட் அலார்ட் கொடுத்துள்ளனர். இதைத்தொடர்ந்து  சென்னையில் தொடர்ந்து மழை  பெய்து வரும் காரணத்தினால் மக்கள் மிகவும் அவதிப்பட்டு கொண்டிருக்கிறார்கள். இந்நிலையில் நேற்று மாலையில் இருந்து தொடர் மழை காரணமாக அங்குள்ள மக்கள் சாதாரணமான வாழ்க்கையை வாழ முடியாமல் அவதிப்படுகிறார்கள்.

சில இடங்களில் வீட்டிற்குள் வரை தண்ணீர் புகுந்துள்ளது. இதனால் மக்கள் வீட்டை விட்டு வெளியேறும் நிலை ஏற்பட்டுள்ளது. இவ்வாறு கஷ்டப்படுபவர்களுக்கு தேமுதிக அலுவலகத்தை தங்கும் இடமாக கொடுப்பதாக பிரேமலதா விஜயகாந்த் அவர்கள் அறிவித்துள்ளார். தேமுதிக அலுவலகம் என்பது கேப்டன்  ஆலயம்  என்பது  குறிப்பிடத்தக்கது.

Read Previous

IND vs NZ 2024: அடுத்த யுத்தத்திற்கு தயாராகும் இந்தியா..!! போட்டிக்கான விவரம் உள்ளே..!!

Read Next

மீண்டும் முன்னணி நடிகருக்கு ஜோடியாக நடிக்கும் கீர்த்தி சுரேஷ்..!! அந்த நடிகர் யார் தெரியுமா?..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular