IND vs NZ 2024: அடுத்த யுத்தத்திற்கு தயாராகும் இந்தியா..!! போட்டிக்கான விவரம் உள்ளே..!!

இந்திய ஆடவர் அணி, பங்களாதேஷ் அணிக்கு எதிராக 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரிலும், 3 போட்டிகள் கொண்ட T20 தொடரிலும் விளையாடி வந்தது. இந்த இரு தொடர்களிலும் இந்திய அணி ஒயிட் வாஷ் வெற்றியை பதிவு செய்தது. அடுத்ததாக இந்திய அணி, நியூசிலாந்து அணிக்கு எதிராக 3 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட்  தொடரில் பங்கேற்கிறது.

இதில் முதலாவதாக இவ்விரு அணிகள் மோதும் முதல் டெஸ்ட் போட்டி நாளை அக்டோபர் 16 ஆம் தேதி தொடங்குகிறது. இத்தொடரின் 3வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி நவம்பர் 1 ஆம் தேதி நடக்கவுள்ளது. இப்போட்டிகளின் அட்டவணையை கீழ் காணலாம்.

இந்தியா –  நியூசிலாந்து டெஸ்ட் அட்டவணை:
  • 1வது டெஸ்ட் போட்டி – அக்டோபர் 16,  எம். சின்னசாமி மைதானம், பெங்களூர்
  • 2வது டெஸ்ட் போட்டி – அக்டோபர் 24, மகாராஷ்டிரா மைதானம் , புனே
  • 3வது டெஸ்ட் போட்டி – நவம்பர் 1, வான்கடே மைதானம், மும்பை

Read Previous

தனது புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களை ஜொள்ளுவிட செய்யும் நடிகை கல்யாணி பிரியதர்ஷன்..!!

Read Next

மழையால் அவதிப்படுபவர்கள் கேப்டன் ஆலயத்தில் வந்து தங்கிக் கொள்ளலாம்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular