இந்த நவீன காலகட்டத்தில் சிறிய தலைவலி என்றாலே மருத்துவமனைக்கு தான் செல்கிறோம். இயற்கையான மருத்துவங்களை கொஞ்சம் கொஞ்சமாக தவிர்த்து வருகிறோம். இந்நிலையில் சளி பிடித்தால் இந்த நண்டு சூப்பை மட்டும் வீட்டில் செய்து குடிச்சு பாருங்க ஒரே நாளில் உங்கள் உடம்பிலிருந்து இந்த சளி ஓடிவிடும்.
ஒரு மிக்ஸிஜரில் ஒரு ஸ்பூன் சீரகம் ஒரு ஸ்பூன் மிளகு சேர்த்து நன்கு பொடி செய்து எடுத்துக்கொள்ளுங்கள்
அதே ஜாரில் 8 பள்ளு பூண்டு ,3 இஞ்சி துண்டுகள் சேர்த்து நைசா அரைத்து கொள்ளுங்கள்
அதே ஜாரில் 10 போல சின்னவெங்காயம் சேர்த்து ஒனும்பாதியுமாய் அரைத்து ஒரு குக்கரில் எண்ணெய் ஊற்றி அரைத்த மசாலைவை சேர்த்து வதக்கிவிடவும் கூடவே மஞ்சள்தூள் , மல்லித்தூள் சேர்த்து அரைகிலோ அளவில் நண்டு சேர்த்தி கிண்டி விடவும்
தேவையான அளவு உப்பு , 2 டம்பளர் தண்ணீர் சேர்த்து கடைசில் கொத்தமல்லித்தழை , கருவேப்பியலை பிச்சு போட்டு
2 விசில் வைத்து இறக்கி சாப்பிட்டு பாருங்கள்.
இது போன்ற நாம் வீட்டிலேயே இயற்கையான முறையில் சூப் வைத்து குடிப்பதன் மூலம் செயற்கை மருத்துவங்களை தவிர்த்து இயற்கையான முறையில் சளியை போக்கலாம். நீங்களும் இதை உங்க வீட்ல ட்ரை பண்ணி பாருங்க.




