விஜய் திமுகவில் சேர்ந்து விடலாம் எச் ராஜா ஆவேச பேச்சு..!!

திமுகவில் தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் அவர்கள் இணைந்து கொள்ளலாம் என்று எச் ராஜா கூறியுள்ளார்..

திமுக இத்தனை ஆண்டுகளாக என்ன கொள்கையை கூறி வந்ததோ அதே கொள்கையை தான் விஜய்யும் கூறுவதாக பாஜக மூத்த தலைவர் எச் ராஜா விமர்சித்துள்ளார், ஒரே கொள்கைக்கு இரு கட்சிகள் எதற்கு என்று கேள்வி எழுப்பியவர் விஜய் திமுகவில் இணைந்து விடலாம் என்றும் ஆலோசனை வழங்கியுள்ளார், மேலும் திமுகவின் கொள்கையை தொடர்ந்து பேசி வருவதால் விஜய்க்கு அரசியல் வீதியில் நிச்சயம் பாதிப்பு ஏற்படும் என்றும் அவர் கூறினார், மேலும் நடந்து முடிந்த மாநாட்டில் தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் பேசியது நினைவுக்கு வருகிறது தான் என்று பலரும் கூறுகின்றனர், எதிரி யார் என்று அறிந்து விட்டேன் ஆனால் இனிமேல் தான் எதிரியின் அலறல்கள் அதிகமாக வரும் என்று தமிழக வெற்றி கழக கட்சியின் தலைவர் விஜய் கூறியது நினைவுக்கு வருவதாக பலரும் தங்களது இணையதள பக்கத்தில் கூறி வருகின்றனர்..!!

Read Previous

சென்னையை அடுத்து ரயில் நிலையத்தில் கிடந்த சூகேசில் சடலம் மீட்பு..!!

Read Next

காலையில் இப்படி செய்வதன் மூலம் சர்க்கரையை கட்டுக்குள் வைத்துக் கொள்ள முடியும்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular