முருங்கைக்கீரை சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்..!!

 

இந்த நவீன காலகட்டத்தில் அனைவரும் சத்தான உணவு முறையை பின்பற்றுவதில் சிலர் தயக்கம் காண்பிக்கின்றனர். ஏனென்றால், அனைவரும் வேலையை நோக்கி ஓடுவதால் ஓய்வு எடுக்கத் தான் நினைக்கிறார்கள் தவிர சத்தான உணவு முறையை சிறிது நேரம் என்று சமைக்க யாரும் முயற்சிப்பதில்லை என்பதே உண்மையாகும். இதனால் அனைவரும், கடையில் கிடைக்கும் உணவுகளையும், பத்து நிமிடத்தில் தயாராகிவிடும் ரெடிமேட் உணவுகளையும் தான் அதிகமாக உட்கொள்கிறார்கள். நம் சத்தான உணவு முறையில் தினமும் ஒரு கீரை சேர்த்துக் கொள்வது என்பது உடலுக்கு ஆரோக்கியம் தரும். நகர்ப்புறங்களில் இருந்து கிராமப்புறங்களில் வரை அனைத்து இடத்திலும் கிடைக்கக்கூடிய முருங்கைக் கீரையை சாப்பிடுவது மிகவும் நல்லது. முருங்கைக் கீரையில் எக்கச்சக்கமான சத்துக்களும் மருத்துவ குணங்களும் நிறைந்துள்ளது. முருங்கைக்கீரை சாப்பிடுவதால் சில நோய்கள் கூட நம்மை விட்டு ஓடிவிடும். அது என்ன என்பதை நாம் இந்த பதிவில் பார்க்கலாம்.

முருங்கைக் கீரையை நீர் சேர்த்து கொதிக்க வைத்து தினமும் சோப்பு போன்று குடித்து வர கழுத்து வலி, மூட்டு வலி, சர்க்கரை வியாதி, சளி, ஆஸ்துமா, ரத்தசோகை, உடல் சூடு, மலச்சிக்கல், போன்ற பல வியாதிகள் நம்மை விட்டு ஓடிவிடும். குறிப்பாக ஹீமோகுளோபின் குறைவாக உள்ள ஆண்கள் பெண்கள் மற்றும் கர்ப்பிணிகள் முருங்கைக் கீரையை வாரத்தில் மூன்று முறை பொறியலாகவோ, அல்லது சூப் போன்றோ நம் உணவில் சேர்த்து அருந்துவதால் பல பிரச்சனைகள் மற்றும் நோய்கள் நம்மை விட்டு தள்ளியே இருக்கும். மேலும் முருங்கைக்கீரை சாப்பிடுவதால் உடல் சூடு குறையும். மலச்சிக்கல் போன்ற பிரச்சினைகளுக்கு இந்த முருங்கைக்கீரை ஒரு சிறந்த தீர்வாக இருக்கும். ஆண் பெண் மலட்டுத்தன்மை மற்றும் தலைமுடி வளர்ச்சியின்மை மற்றும் அல்சர் வாய் புண் போன்றவற்றை முருங்கைக்கீரை சாப்பிடுவதன் மூலம் தவிர்க்கலாம். தாய்ப்பால் கொடுத்து வரும் தாய்மார்களுக்கு தாய்ப்பால் சிறப்பினை அதிகரிக்க இந்த முருங்கைக்கீரை உதவுகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

Read Previous

ஒரு பொண்ணுக்கு திருமணம் என்பது எப்படி இருக்கும்..??

Read Next

கடன் பிரச்சினைக்கு உடனடி தீர்வு..!! இத மட்டும் ட்ரை பண்ணுங்க போதும்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular