பல் துலக்குவது என்றாலே நமக்கு காலை பழக்கம் தான் நினைவுக்கு வரும். ஆனால், நீங்கள் தெரிஞ்சுக்கணும் இரவு பல் துலக்காமல் விடுறது, பற்கள் மட்டும் இல்லாமல் இதயத்துக்கும் பெரிய ஆபத்து தரும். பல் துலக்குவது என்பது பெரும்பாலும் காலை நேரத்தில் செய்யும் ஒரு சாதாரண பழக்கமாக பலரால் கருதப்படுகிறது.
மருத்துவ நிபுணர்கள் கூறுவதாவது, இரவு நேரத்தில் பல் துலக்குவது மிகவும் முக்கியமான ஆரோக்கிய பழக்கமாகும். பலர் சோர்வினால் அல்லது கவனக்குறைவால் இரவு பல் துலக்காமல் தூங்கிவிடுகிறார்கள். ஆனால் இந்த சிறிய அலட்சியம் பற்கள் மட்டுமல்லாமல் உடலின் மற்ற உறுப்புகளுக்கும், குறிப்பாக இதய ஆரோக்கியத்திற்கும் பாதிப்பை ஏற்படுத்தும் என்று சில ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
ஆதாரம் : 2023-ல் Scientific Reports வெளியிட்ட ஒரு முக்கிய ஆய்வு
இரவில் பல் துலக்காமல் இருந்தவர்கள், இதய செயலிழப்பு (Heart Failure) மற்றும் இதய துடிப்பு சீர்கேடு (Arrhythmia) காரணமாக மருத்துவமனையில் சேர வேண்டிய அபாயம் அதிகம் என கண்டறிந்தது.அதாவது 2023-ல் Scientific Reports ஜர்னலில் ஒரு ஆய்வு வெளியானது. அந்த ஆய்வில் 1675 பேர் குறித்து ஆய்வு செய்து,
1.காலை + இரவு பல் துலக்கும்வர்கள்
2.இரவு மட்டும் துலக்கும்வர்கள்
3.காலை மட்டும் துலக்கும்வர்கள்
4.துலக்காதவர்கள்
என்று பிரித்து ஆராய்ந்தனர். அதில் இரவு பல் துலக்காதவர்கள் சில இதய நோய் சம்பவங்களில் அதிக அபாயம் இருக்கலாம் என்று கண்டறியப்பட்டது. ஆனால் முக்கியமாக அந்த ஆய்வு சொல்வது: இது நேரடியாக இதய நோய் ஏற்படும் என்று நிரூபிக்கவில்லை. இது ஒரு தொடர்பு (association) மட்டும். இதனால், பல் துலக்கும் பழக்கம் பற்கள் மட்டும் அல்ல, இதய ஆரோக்கியத்தையும் காப்பாற்றும் .
இதயத்துக்கு பாதிப்பு : என்பது இரவு பல் துலக்காமல் விட்டால் வாயில் பாக்டீரியா அதிகரிக்கும். அந்த பாக்டீரியாக்கள் ஈறுகளை பாதித்து, அழற்சியை (Inflammation) உண்டாக்கும். இந்த அழற்சி இரத்தத்துக்கு சென்று, இரத்தக் குழாய்களை சேதப்படுத்தும். இதனால் இதய நோய்கள், Stroke அபாயம் கூட அதிகரிக்கும்!
இரவு பல் துலக்குவது ஏன் மிக முக்கியம் தெரியுமா ? நாம் நாள் முழுவதும் சாப்பிடும் உணவுகளின் சிறிய துகள்கள் பற்களுக்குள் மற்றும் ஈறுகளின் அருகே சேர்ந்து விடுகின்றன. இரவு நேரத்தில் பல் துலக்காமல் விட்டால், வாயில் உள்ள பாக்டீரியாக்கள் அந்த உணவு துகள்களை பயன்படுத்தி வேகமாக பெருக ஆரம்பிக்கும். அதாவது இரவில் நாம் தூங்கும்போது உமிழ்நீர் (Saliva) சுரப்பது குறையும். இதனால் வாயில் உள்ள பாக்டீரியாக்கள் வேகமாக பெருகும். அதுவே ஈறு நோய், பல் சிதைவு, மூச்சு துர்நாற்றம் மட்டுமல்லாமல் இதய நோய்களுக்கும் வழிவகுக்கும்.
மருத்துவ ஆய்வுகள் சிலவற்றின் படி, ஈறுகளில் ஏற்படும் அழற்சி உடலின் இரத்த ஓட்டத்துடன் தொடர்பு கொள்ளக்கூடும். அந்த அழற்சி காரணமாக சில பாக்டீரியாக்கள் அல்லது அழற்சி காரகங்கள் இரத்தத்தில் கலக்கும்போது, இரத்தக் குழாய்களில் பாதிப்பு ஏற்படும் அபாயம் இருப்பதாக சில ஆராய்ச்சிகள் கூறுகின்றன. இது நீண்ட காலத்தில் இதய நோய் அபாயத்தை அதிகரிக்கக்கூடும் என்று விஞ்ஞானிகள் கருதுகின்றனர். எனினும் இது நேரடியாக இதய நோயை ஏற்படுத்தும் என்று உறுதியாக நிரூபிக்கப்பட்டது அல்ல; ஆனால் வாய் ஆரோக்கியமும் உடல் ஆரோக்கியமும் ஒன்றுடன் ஒன்று தொடர்புடையவை என்பது மருத்துவ உலகில் ஏற்கப்பட்ட உண்மை.
ஆகவே உங்கள் தினசரி Oral Care Routine என்பது காலை & இரவு – 2 தடவை பல் துலக்க வேண்டும். தினமும் Floss பண்ணி பற்கள் நடுவில் சுத்தம் செய்ய வேண்டும். Mouthwash பயன்படுத்தினால், பாக்டீரியா குறையும். 6 மாதங்களுக்கு ஒருமுறை Dental Checkup அவசியம். காலை துலக்குறேன், போதும்!”ன்னு நினைக்காதீங்க. இரவு துலக்குறது தான், உங்க பற்கள் மற்றும் இதயத்துக்கு உண்மையான பாதுகாப்பு
நாம் செய்யும் ஒரு சிறிய பழக்கம் பெரிய ஆரோக்கிய பாதுகாப்பு என்பதை உணர்ந்து இரவு 2 நிமிடம் பல் துலக்கினாலே, நீங்கள் பல் சிதைவு, ஈறு நோய், மூச்சு துர்நாற்றம் மட்டும் இல்லாமல், இதய நோய் அபாயத்தையும் குறைக்க முடியும்.




