படித்ததில் மனதை தொட்ட பதிவு..!! கட்டாயமாக அனைவரும் படிக்கவும்..!!

செட்டி நாட்டு வீதியொன்றில் கிரை விற்று கொண்டு செல்கிறாள் ஒரு பெண், வீட்டு வாசலில் மகளோடுஅமர்ந்திருந்த தாய், கீரை வாங்க அவளைக் கூப்பிடுகிறாள்.

ஒரு கட்டு கீரை என்ன விலை❓

ஓரணாம்மா.

ஓரணாவா❓

அரையணா தான் தருவேன்.

அரையணான்னு சொல்லி நாலு கட்டு கொடுத்திட்டு போ.

“இல்லம்மா வராதும்மா”,

அதல்லாம் முடியாது.

அரையணாதான்”, பேரம் பேசுகிறாள் அந்தத் தாய்.

பேரத்திற்கு ஒத்துக் கொள்ளாத அந்த பெண் கூடையை எடுத்துக்கொண்டுசிறிது தூரம் சென்று விட்டு, மேல் காலணா போட்டு கொடுங்கம்மா என்கிறாள்.

முடியவே முடியாது.

கட்டுக்கு அரையணா தான் தருவேன் என்று தாய் பிடிவாதம் பிடித்தாள்.

கீரைக்காரி சிறிது யோசனைக்கு பிறகு “சரிம்மா உன் விருப்பம்” என்று கூறிவிட்டு நாலு கட்டு கீரையைக் கொடுத்துவிட்டு ரெண்டணா காசை வாங்கிக் கொண்டு கூடையை தூக்கி தலையில் வைக்க போகும் போது கீழே சரிந்தாள்.

“என்னடியம்மா காலை ஏதும் சாப்பிடலையா❓என்று அந்த தாய் கேட்க, இல்லம்மா போய் தான் கஞ்சி காய்ச்சிணும்”

சரி.

இரு இதோ வர்றேன்.” என்றுகூறிவிட்டு வீட்டுக்குள் சென்றவள்,திரும்பும்போது ஒரு தட்டில் ஆறு இட்லிகளையும், அவற்றிற்குத் தேவையான சட்னியையும் வைத்துக் கொண்டு வந்தாள்.

இந்தா சாப்பிட்டு விட்டுப் போ” என்று கீரைக்காரியிடம் கொடுத்தாள்.

எல்லாவற்றையும் பார்த்துகொண்டிருந்த அந்தத் தாயினுடைய மகள்” ஏம்மா அரையணாவுக்கு பேரம் பேசுனீங்க..

ஒரு இட்லி அரையணான்னு வச்சுகிட்டாக்கூட ஆறு இட்லிக்கு ரெண்டரையணா வருதும்மா❓என்று கேட்க அதற்கு அந்த தாய்,

“வியாபாரத்துல தர்மம் பார்க்ககூடாது, தா்மத்துல வியாபாரம் பார்க்க கூடாதும்மா” என்று நெத்தியடியாகக் கூறினாள்.

 

Read Previous

தாத்தா……என் பிரண்டு( சிறுகதை)..கண்ணீர் வரவைக்கும் பதிவு..!!

Read Next

செவ்வாழையின் நன்மைகள் என்னென்ன..? கண்கள் சம்பந்தப்பட்ட அத்தனை கோளாறுகளையும் இந்த செவ்வாழை எப்படி நீக்குகிறது தெரியுமா..?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular